சிங்கப்பூரில் 26 வயது இளைஞர் கைது..!! காரணம் என்ன..??

சிங்கப்பூரில் 26 வயது இளைஞர் கைது..!! காரணம் என்ன..??

சிங்கப்பூரில் இன்று (ஜூன் 14) அதிகாலை நேரத்தில் அட்மிரல்டி மேற்கு சாலையில் நடந்த சம்பவத்தை SGRV ADMIN என்ற சமூக உலக பக்கத்தில் காணொளி பதிவு வெளியிடப்பட்டிருந்தது.

அதில் ஒருவர் அவர் சாலையில் நடுவே ஒரு லாரி ஓட்டுனரிடம் பேசிக்கொண்டிருந்தார். சாலையில் நடுவே போதையில் சாலையின் நடுவில் ஒரு நபர் படுத்து கிடந்ததாக தெரியவந்துள்ளது.

அவருக்கு அருகில் உள்ள ஒரு மோட்டார் சைக்கிளும், ஒரு காரும் நிறுத்தப்பட்டிருப்பது காணொளியில் தெரியவந்துள்ளது. சாலையின் நடுவே படுத்து கிடந்த அவரை தலைக்கவசம் அணிந்த நபர் பரிசோதிக்க செல்லும்போது மற்றொருவர் பாதிக்கப்பட்ட பாதையை சுற்றி வளைந்து செல்லுமாறு எதிரேவரும் வாகனங்களுக்கு சைகை காட்டியுள்ளார்.

இந்த சம்பவமானது இன்று (ஜூன் 14) அதிகாலை சுமார் 3:15 மணியளவில் அட்மிரல்டி ரோடு வெஸ்டில் நடந்ததாகவும் தகவல் கிடைத்ததாக தெரியவந்துள்ளது.

இந்த குற்றத்திற்காக பொது இடத்தில் போதையில் இருந்ததற்காக 26 வயது இளைஞர் ஒருவரை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் அவர் செய்த சந்தேகத்திற்கு இடமான அநாகரிக செயல்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குடிமை பாதுகாப்பு படையினரை தொடர்பு கொண்ட போது அட்மிரல்டி மேற்கு சாலையில் அதிகாலை சுமார் 4:50 மணி அளவில் இந்த சம்பவம் நிகழ்ந்தது என்று தங்களுக்கு தகவல் கிடைத்ததாக கூறியுள்ளனர்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK