சிங்கப்பூர் – மலேசியா பயணிகளுக்கு குட் நியூஸ்..!! RTS Link பணிகளில் புதிய முன்னேற்றம்..!!

சிங்கப்பூர் - மலேசியா பயணிகளுக்கு குட் நியூஸ்..!! RTS Link பணிகளில் புதிய முன்னேற்றம்..!!

ஜோகூர் பாரு-சிங்கப்பூர் மெட்ரோ ரயில் (RTS Link) திட்டப்பணி திட்டமிட்டபடி சீராக நடைபெற்று வருவதாக சிங்கப்பூர் தேசிய வளர்ச்சி துறை மற்றும் வெளியுறவுத்துறையின் மூத்த அமைச்சர் டாங் ஜென்ஹுய் மற்றும் சிங்கப்பூர் குடிநுழைவு ஆணையம் (ICA) உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்தத் திட்டமானது 2026 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் நிறைவடைந்து , பயணிகளுக்கு சேவை தயாராகும் வகையில் பணிகள் வேகப்படுத்தப்பட்டுள்ளன.

உட்லண்ட்ஸ் நார்த் நிலையம், ஜோகூர் பாரு – சிங்கப்பூர் MRT அமைப்பின் சிங்கப்பூர் முனையமாகும்.

திறமையான மற்றும் பாதுகாப்பான நுழைவு சோதனைகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் சிங்கப்பூர் சுங்கம், குடிவரவு மற்றும் தனிமைப்படுத்தல் வளாகத்தில் (CIQ) ஒரு புதிய அனுமதி மற்றும் பாதுகாப்பு அமைப்பு பொருத்தப்பட உள்ளதாகவும் நேற்று இரவு தனது முகநூல் பக்கத்தில் அமைச்சர் டாங் பதிவிட்டுள்ளார்.

இந்த அமைப்பானது தற்பொழுது சோதனைக்கு உட்படுத்தப்பட்ட வருகிறது. மேலும் ஜோக்கர் பாரு – சிங்கப்ப MRT சேவையை இயக்குவதற்காக ICA பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டும் வருகிறது.

எல்லையைக் கடக்கும் நேரத்தைக் குறைப்பதற்காக ஜோகூர் பாரு வின் புக்கிட் சாகர் வளாகத்தில் 100 ” Al ஆதார விழித்திரை / முக அங்கீகார
இ-கேட்டுகள் ” பொருத்தப்பட்டு வருகின்றன. இவை ஒரு பயணியின் சுங்க அனுமதியை வெறும் 7 வினாடிகளில் முடிக்கும் திறன் கொண்டவை ஆகும்.

எல்லையைக் கடந்து அதிகாரிகள் பணியாற்றும் வகையில் இரு நாடுகளும் தங்களின் நாடாளுமன்றத்தில் பிரத்யேக இருதரப்பு சட்ட மசோதாக்களை (RTS Link Bill 2026) நிறைவேற்றி உள்ளன.

இதன்படி சிங்கப்பூரில் உட்லண்ட்ஸ் நார்த் நிலையத்தின் குறிப்பிட்ட எல்லைக்குள் மலேசிய அதிகாரிகள் சோதனை நடத்த முடியும். எனினும் அங்கு ஏதாவது அவசர நிலைகள் ஏற்பட்டால் சிங்கப்பூர் பாதுகாப்புப் படையினரே (SCDF) அதற்கு முழு பொறுப்பேற்க வேண்டும்.

இந்த மெட்ரோ ரயில் மூலம் சிங்கப்பூர் நிலையத்திலிருந்து ஜோகூர் பாருவின் புக்கிட் சாகர் நிலையத்தை வெறும் 5 நிமிடங்களில் சென்றடைய முடியும்.

ஒரு மணி நேரத்திற்கு ஒரு திசையில் 10,000 பயணிகள் வரை பயணிக்கும் வசதி உள்ளதால் காஸ்வே (Causeway) பாலத்தின் போக்குவரத்து நெரிசல் 25% வரை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK