சாலையின் நடுவே தலைகீழாய் கவிழ்ந்த டாக்சி..!! செராங்கூனில் அதிர்ச்சி சம்பவம்..!!
சிங்கப்பூரில் இன்று (ஜூன் 20) அதிகாலை செராங்கூன் MRT நிலையம் அருகே ஒரு கார் மற்றும் 3 டாக்சிகள் சம்பந்தப்பட்ட சாலை விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் ஒரு கார் தலைகீழாக கவிழ்ந்து சாலையின் நடுப்பகுதியை மறித்து நின்றது.
விபத்து குறித்த புகைப்படங்கள் ROAD.SG என்ற முகநூல் பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. அதில் வெள்ளை நிற காரின் முன் இடது சக்கரம் கடுமையாக சிதைந்து இருப்பதும், அதன் முன்பகுதி சேதம் அடைந்திருப்பதும் தெரிகிறது. மேலும் 3 கம்ஃபோடெல்க்ரோ டாக்ஸிகளின் முன் மற்றும் பின் பகுதிகளும் சேதம் அடைந்து காணப்படுகின்றன.
கார் முற்றிலும் தலைகீழாக கவழ்ந்து சாலையின் முக்கிய பகுதியை மறைத்ததால், அதிகாலை நேரத்தில் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்துப் பாதிப்பு ஏற்பட்டிருந்தது.
இந்த விபத்து நிகழ்ந்த உடனே சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினருக்கும் (SCDF), காவல்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள் விபத்தில் சிக்கிய ஓட்டுநர்கள் மற்றும் பயணிகளை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இந்த விபத்து எதனால் ஏற்பட்டது, யாருடைய கவனக்குறைவால் இது நிகழ்ந்தது என்பது குறித்த கோணங்களில் சிங்கப்பூர் காவல்துறையினர் தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
36 வயதான டாக்சி ஓட்டுநர் ஒருவர் காவல்துறையின் விசாரணைக்கு உதவி வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
சிங்கப்பூரில் அதிகாலை நேரங்களில் சோர்வு மற்றும் அதிவேகம் காரணமாக இது போன்ற விபத்துக்கள் அதிகம் ஏற்ப்படுவதால் ஓட்டுநர்கள் எப்போதும் விழிப்புடன் இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர்.