சிங்கப்பூரில் 3 மலேசிய இளைஞர்கள் கைது..!! காரணம் என்ன..??

சிங்கப்பூரில் 3 மலேசிய இளைஞர்கள் கைது..!! காரணம் என்ன..??

சிங்கப்பூர்: மலேசியாவில் செயல்படும் மோசடி கும்பலின் அறிவுறுத்தலின்படி, சிங்கப்பூருக்கு பயணம் செய்து, மோசடி பணத்தையும் வங்கி அட்டைகளையும் பெற முயன்ற 3 மலேசியர்களை சிங்கப்பூர் காவல்துறை கைது செய்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் 22 வயது முதல் 24 வயதிற்கு உட்பட்டவர்கள் என காவல்துறை தெரிவித்துள்ளது. அவர்கள் மீது இன்று (ஜூன் 20) நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட 3 மலேசியர்களும் சிங்கப்பூருக்குள் நுழைந்த 6 மணி நேரத்திற்குள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடமிருந்து 69 வங்கி அட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.20 க்கும் மேற்பட்ட மோசடி வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து சுமார் $200,000 வரை பெற இந்த வங்கி அட்டைகளை அவர்கள் பயன்படுத்தியுள்ளனர்.

அவர்களில் ஒருவர் மீது குற்றவியல் நடவடிக்கைகளின் மூலம் கிடைக்கும் பலன்களைப் பிறர் அடைவதற்கு துணை புரிந்ததாக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 2 நபர் மீது கணினி அமைப்பிற்கு அங்கீகரிக்கப்படாமல் அணுகியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் இது போன்ற மோசடி பணத்தை மீட்க பிற மாநிலங்களில் இருந்து ஆட்களை வரவழைக்கும் சம்பவங்கள் சமீப காலமாக அதிகரித்து வருவதாக சிங்கப்பூர் காவல்துறை எச்சரித்துள்ளது.

இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அபராதம் மற்றும் பிரம்படி போன்ற கடுமையான தண்டனைகள் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK