சிங்கப்பூரை அதிரவைத்த தீ விபத்து..!! கொளுந்துவிட்டு எரிந்த உணவக மையம்..!!

சிங்கப்பூரை அதிரவைத்த தீ விபத்து..!! கொளுந்துவிட்டு எரிந்த உணவக மையம்..!!

சிங்கப்பூர்: ஹுவாங்பு பகுதியில் அமைந்துள்ள ‘ஹுவாங்பு மக்கான் ப்ளேஸ்’ உணவக மையத்தில் உள்ள ஒரு கடையின் புகைப்போக்கிக் குழாயில் நேற்று (ஜூன் 19) மதியம் ஒரு பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்த மதியம் சுமார் 4:10 மணியளவில் சிங்கப்பூர் குடிமைப் தற்காப்புப் படையினருக்கு (SCDF) தகவல் தெரிவிக்கப்பட்டது.

விபத்திற்கான காரணம்: ஸ்வீ லீ(Swee Lee) என்ற மேற்கத்திய உணவு விற்கும் கடையின் டடீப் பிரையர் எனப்படும் அதிக எண்ணெய் கொண்ட வறுவலில் இருந்து இந்த தீப்பொறிக் கிளம்பி இருக்கலாம் எனக் கூறப்படுகிறது .

அந்த தீப்பொறியானது கடையின் மேலிருந்த புகைப்போக்கிக் குழாயில் படிந்திருந்த சமையல் எண்ணெய் மற்றும் பிசுபிசுப்புகளில் பட்டதால் தீ சட்டென்று பரவி, அப்பகுதி முழுவதும் சாம்பல் நிறப் புகையால் சூழப்பட்டது.

பாதுகாப்பு முன்னெச்சரிக்கை காரணமாக உணவக மையத்திலிருந்து சுமார் 100 வாடிக்கையாளர்கள் மற்றும் கடை உரிமையாளர்களை SCDF வீரர்கள் பத்திரமாக வெளியேற்றினர்.

2 தண்ணீர் பீச்சி அடிக்கும் குழாய்கள் மூலம் சுமார் அரை மணி நேர போராட்டத்திற்குப் பிறகு தீயை முழுமையாக வீரர்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதிர்ஷ்டவசமாக இந்த தீ விபத்தில் யாருக்கும் எந்தவொரு காயமும் ஏற்படவில்லை.

சிங்கப்பூரில் முஸ்லிம் உணவு கடை ஒன்றை சுமார் 43 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தி வரும் 64 வயதுடைய ஜமீலா லத்தீப் என்ற பெண்மணி ஒருவர், நான் இங்கு கடை நடத்தும் இத்தனை ஆண்டுகளில் இதுதான் இங்கு நடந்த மிகவும் மோசமான மற்றும் மிகப்பெரிய தீ விபத்து என்று விபத்து குறித்து வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

இது போன்ற விபத்துக்களைத் தவிர்ப்பதற்கு அனைத்து கடைக்காரர்களும் தங்களது சமையல் அடுப்பு மற்றும் புகைப்போக்கிகளை எண்ணெய் பிசுபிசுப்பு இல்லாமல் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் எனவும், ஆண்டிற்கு ஒரு முறையாவது அவற்றை சுத்தம் செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK