சிங்கப்பூரின் பொது பேருந்துகளில் புதிய கட்டண அட்டை இயந்திரங்கள் சோதிக்கப்பட்டு வருகின்றன.
அடுத்த ஆண்டு (2027) கடைசிக்குள் எல்லா பேருந்துகளிலும் நவீன இயந்திரம் பொருத்தப்படும் என நிலப் போக்குவரத்து ஆணையம்(LTA) தனது முகநூல் பதிவில் கூறியுள்ளது.
இந்த புதிய கட்டண அட்டை இயந்திரத்தில் பெரிய திரையும் பெரிய எழுத்துக்களும் இருக்கும்.
SimplyGo கட்டண விவரத்தை திரை விரைவில் புதுப்பித்து காட்டும். மேலும் sensor இருக்கும் ஒரு குறிப்பிட்ட பகுதியில் அட்டையை காட்ட வேண்டிய எந்த ஒரு அவசியமும் இருக்காது.
திரையின் எந்த பகுதியில் அட்டையை காட்டினாலும் பேருந்துகளில் கட்டணமானது கழித்துக் கொள்ளப்படும். இதை பயன்படுத்துவது சுலபம் பயன அனுபவம் இனிமையாக இருக்கும் எனவும் LTA குறிப்பிட்டுள்ளது.
தற்போது இந்த புதிய முறை சோதிக்கப்பட்டு வருகிறது திட்டம் முழுமையாக நடப்பிற்கு வருவதற்கு முன்பே அதை நம்பகத்தன்மை முழுமையாக உறுதி செய்யப்படும் என LTA கூறியுள்ளது