பரபரப்பு வழக்கில் முக்கிய உத்தரவு..!! தம்பதிக்கு பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் ஆணை..!!

பரபரப்பு வழக்கில் முக்கிய உத்தரவு..!! தம்பதிக்கு பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் ஆணை..!!

“கும்பகோணம் போலி மோனாலிசா” கும்பமேளாவில் ருத்ராட்ச மாலைகள் விற்பனை செய்த வீடியோக்கள் வைரலானதால், “மோனாலிசா” என்ற பெயரில் பிரபலமானார்.

இந்த விவகாரம் பரபரப்பாக மாறியதற்கு காரணம், மோனாலிசா கேரளாவில் ஃபர்மான் கான் என்பவரை திருமணம் செய்துகொண்டதுதான். திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த அவரது குடும்பத்தினர், மோனாலிசா சிறுமி என்றும், அவரை கடத்திச் சென்றதாகவும் மத்தியப் பிரதேசத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து கடத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

ஆனால், மோனாலிசா தாம் 18 வயதை கடந்தவர் என்றும், தனது விருப்பத்தின்படியே திருமணம் செய்துகொண்டதாகவும் கூறியுள்ளார். அவரது வயது தொடர்பாக முரண்பட்ட ஆவணங்கள் இருப்பதால், இந்த வழக்கு சட்ட ரீதியாக சிக்கலானதாக மாறியுள்ளது.

கேரள காவல்துறை சமர்ப்பித்த ஆவணங்களில் அவர் வயது வந்தவர் எனக் கூறப்பட்டாலும், மத்தியப் பிரதேச தரப்பில் அவர் சிறுமி என வாதிடப்படுகிறது.

இந்த நிலையில், தங்களுடைய உயிருக்கு ஆபத்து இருப்பதாக மோனாலிசா மற்றும் அவரது கணவர் கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிமன்றம், அவர்களுக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்க கேரள அரசுக்கும் காவல்துறைக்கும் உத்தரவிட்டுள்ளது.

கும்பகோணத்தைச் சேர்ந்த ‘போலி மோனாலிசா’ என்று அழைக்கப்படும் பெண் மற்றும் அவரது கணவருக்கு தகுந்த போலீஸ் பாதுகாப்பு வழங்குமாறு கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தற்போது, மோனாலிசாவின் உண்மையான வயது, திருமணத்தின் சட்டப்பூர்வ தன்மை மற்றும் மத்தியப் பிரதேசத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்புக்குப் பிறகே இந்த விவகாரத்தில் முழுமையான தெளிவு கிடைக்கும்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK