SIA விமான பயணத்தின் போது நேர்ந்த சம்பவம்..!! 6 மாத சிறை தண்டனை..!! காரணம் என்ன..??
இந்தியாவைச் சேர்ந்த ஆகாஷ் திவாரி(35) என்பவர் கடந்த பிப்ரவரி மாதம் 9 ஆம் தேதி தாய்லாந்தில் இருந்து சிங்கப்பூர் வந்து கொண்டிருந்த விமானத்தில் நண்பர்கள் 4 பேருடன் பயணம் செய்து கொண்டிருந்தார்.
அப்போது பெண் விமான பணியாளர்கள் அவ்வழியே நடந்த செல்லும் நேரத்தில் அவர்கள் கேளிக்கையாக சிரித்து கைகாட்டி உள்ளனர்.
பெண் பணியாளர் விமானம் புறப்படுவதற்கு முன்பு உணவு தெரிவு குறித்து தெரிந்து கொள்வதற்கு அவர்களிடம் சென்றுள்ளார். அப்போது ஆகாஷ் அவரது கையால் அவரை உரசியுள்ளார்.
இதனை அடுத்து பாதிக்கப்பட்ட பெண் தலைமை விமான பணியாளரிடம் இதைப் பற்றி தெரியப்படுத்தினார். பிறகு அவர் விமானத்தின் வேறு பகுதிக்கு இடம் மாற்றப்பட்டார்.
ஆனாலும் அவர் பயணிகள் உண்டு முடித்த பிறகு தட்டுகளை எடுத்துக் கொண்டிருந்த பொழுது ஆகாஷ் மறுபடியும் அவரது கைவரிசையை காட்டியுள்ளார்.
உடனே இது குறித்து தலைமை விமான பணியாளரும் பாதிக்கப்பட்ட பெண்ணும் ஆகாஷை கேள்வி கேட்கச் சென்றனர். ஆனால் அவர் அவரது தவறை ஒப்புக்கொள்ள மறுத்துவிட்டார்.
இந்த சம்பவம் குறித்து தலைமை விமான பணியாளர் அவரது மேலாளரிடமும் விமானியிடமும் கூறுவதற்கு சென்றபோதும் ஆகாஷ் பாதிக்கப்பட்ட பெண் பணியாளரை பின்தொடர்ந்து அவருக்கு மிக அருகாமையில் நின்று இருக்கிறார்.
அதற்குப் பிறகும் ஆகாஷ் பெண்ணை பின் தொடர்ந்தார். இந்த சம்பவத்தை மற்றும் பயணிகள் பார்த்தனர் அதன் பிறகு ஒரு வழியாக ஆகாஷ் பெண்ணை தொந்தரவு செய்வதை நிறுத்திவிட்டார். இதனை அடுத்து விமானம் சிங்கப்பூர் வந்தடைந்த போது ஆகாஷை காவல்துறையினர் கைது செய்தனர்.
இது குறித்த தகவலை காவல்துறையினர் சேகரித்து அதன் பிறகு ஆகாஷை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். ஆகாஷ் அவர் மீது சுமத்தப்பட்ட குற்றத்தை ஒப்புக்கொண்டார். மேலும் அவர் $1,270.95 இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் ஆறு மாத சிறை தண்டனையும் விதித்து நேற்று (ஜூன் 22) நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.