மேசையில் விழுந்த உணவை சாப்பிட்ட பெண்..!! வைரல் வீடியோவுக்கு SFA எச்சரிக்கை..!!
உங்கப்பூரில் உள்ளூர் சாலையோர உணவகத்தில் உணவருந்தி கொண்டிருந்தபோதும் மேசையில் விழுந்த நூடுல்ஸை ஒரு பெண் எடுத்து சாப்பிட்ட காட்சி காணொளியில் பதிவாகியுள்ளது.
அந்த காணொளியானது சமீப காலங்களில் சமூக ஊடகத்தில் வைரலாக பரவி இணையவாசிகள் இடையே விவாதங்களைத் தூண்டி உள்ளது.
காணொளியில் ஒரு பெண் உணவருந்தும்போது தவறுதலாக சிறிதளவு நூடுல்ஸ் மேசையில் கொட்டி விடுகிறது. அதை அவர் எந்தவொரு தயக்கமும் இன்றி தனது குச்சிகளால் நூடுல்ஸை எடுத்து நேராக வாயில்போட்டுக் கொள்கிறார்.
இதனை கண்ட பல இணையவாசிகள் இதை பார்க்கவே சகிக்க முடியவில்லை என குறிப்பிட்டுள்ளனர். சாலையோரக் கடைகளில் நடு மேசைகளில் பெரும்பாலும் உணவுத் துண்டுகளும் நீர் கரைகளும் இருப்பதாகவும் அவை முறையாக சுத்தம் செய்யப்படாமல் இருப்பதாகவும் சிலர் கூறியுள்ளனர்.
மேலும் சிலர் செலவாகும் பணத்தை கருத்தில் கொண்டால் ஒவ்வொரு கவளமும் விலைமதிப்பற்றதாக இருக்க வேண்டும் என்று நகைச்சுவையாகவும் இந்த காணொளியைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளனர்.
இணையத்தில் விவாதத்தை தூண்டியை இந்த காணொளிக்கு பதில் அளிக்கும் விதமாக, சிங்கப்பூர் உணவு முகமை (SFA) தயவுசெய்து இதை செய்யாதீர்கள் என்று நகைச்சுவையான தோனியில் பதிவிட்டுள்ளது.
சுத்தமில்லாத மேசை உணவு விழுந்தவுடன் அந்த உணவின் மேற்பரப்புப் பாக்டீரியாக்களால் மாசுபடக்கூடும் எனவும் கூறியுள்ளது. மேலும் மூன்று வினாடி விதி என்றெல்லாம் எதுவும் இல்லை என்பதையும் அதிகாரிகள் சுட்டிக்காட்டி உள்ளனர்.
மூன்று வினாடி விதி என்பது தரையிலோ அல்லது மேசையிலோ சிந்திய உணவை சில வினாடிகளுக்குள் எடுத்த உண்டால் அது அசுத்தம் அடையாது என்று ஒரு பிரபல நம்பிக்கை இருந்து வருகிறது. இது போன்ற தவறான செயலை யாரும் செய்ய வேண்டாம் எனவும், இது எப்பொழுதும் ஆபத்தானது எனவும் SFA அறிவுறுத்தியுள்ளது.