இளைஞர்களுக்கு 1.1 கோடி வேலைகள்: உலக வங்கியின் பிரம்மாண்ட திட்டம்..!!
இந்தியாவின் கட்டமைப்பு சீர்திருத்தங்களை மேம்படுத்தவும், தனியார் துறை மூலம் வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் உலக வங்கி ரூ.12,500 கோடி ($1.5 பில்லியன்) கடன் உதவிக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
முக்கிய அம்சங்கள்: அடுத்த இரண்டு தசாப்தங்களில் (20 வருடங்கள்) ஆண்டுதோறும் தொழிலாளர் சந்தையில் நுழையும் 11 மில்லியன் (1.1 கோடி) இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதே இதன் முக்கிய இலக்காகும்.
இந்த நிதி உலக வங்கியின் ‘வளர்ச்சி கொள்கை நிதியுதவி’ (DPF) திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது
சீர்திருத்தங்கள்: வரிவிதிப்பு முறை எளிமையாக்கப்படுதல், வணிகச் சூழலை மேம்படுத்துதல், முதலீடுகளை ஈர்த்தல் மற்றும் தொழில் தொடங்குவதிலுள்ள தடைகளை அகற்றுதல் ஆகிய மத்திய அரசின் பொருளாதார சீர்திருத்தங்களை உலக வங்கி பாராட்டியுள்ளது.