பூமியை துளைத்து மறுபக்கம் செல்ல முடியுமா..?? அதற்கு விடை சொன்ன ரஷ்யாவின் 22 ஆண்டு ஆய்வு..!!

பூமியை துளைத்து மறுபக்கம் செல்ல முடியுமா..?? அதற்கு விடை சொன்ன ரஷ்யாவின் 22 ஆண்டு ஆய்வு..!!

கோள வடிவமாக இருக்கும் நமது பூமி, இந்த அண்டவெளியில் இடைவிடாமல் சுழன்று கொண்டிருக்கிறது.

“பூமியின் ஒரு பக்கத்தில் துளையிட்டுக் கொண்டே போனால், மறுபக்கம் வழியாக வெளியே வர முடியுமா?” என்று என்றாவது நீங்கள் சிந்தித்ததுண்டா? சிறு பிள்ளைத் தனமான கேள்வியாகத் தோன்றினாலும், இதை நிஜமாகவே செய்து பார்க்க உலக நாடுகள் முயன்றன. விசித்திரமான மற்றும் ஆபத்தான இந்த ஆராய்ச்சியில் இரண்டு வல்லரசு நாடுகள் களம் இறங்கியது.

அதில் ஒன்று அமெரிக்கா, மற்றொன்று ரஷ்யா.பூமியைத் தோண்டும் விசித்திரமான இந்த போட்டியில் அமெரிக்கா ஆரம்பத்திலேயே தோல்வியைத் தழுவியது. ஆனால், ரஷ்யா மட்டும் இந்த முயற்சியை விடாமல் தொடர்ந்தது. 1970-ம் ஆண்டு சோவியத் யூனியனால் தொடங்கப்பட்ட இந்த ஆராய்ச்சி, 1992-ம் ஆண்டு வரை நீடித்தது.

ரஷ்யாவின் வடமேற்குப் பகுதியில் அவர்கள் துளையிட்ட அந்த இடத்திற்கு “கோலா சூப்பர் டீப் போர்ஹோல்” என்று பெயர்.சுமார் 23 ஆண்டுகால உழைப்பிற்குப் பிறகு, ரஷ்ய அரசாங்கத்தின் சார்பில் 12 ஆயிரத்து 262 மீட்டர் (அதாவது சுமார் 12.2 கிலோமீட்டர்) ஆழம் வரை துளையிட முடிந்தது.

மனித வரலாற்று லேயே பூமியில் போடப்பட்ட மிக ஆழமான செயற்கைத் துளை இதுதான். ஆச்சரியமாக, உலகின் மிக ஆழமான இந்தத் துளையின் அகலம் வெறும் 9 அங்குலம் மட்டுமே.

இதன் பிரம்மாண்டத்தை எளிதாகப் புரிந்து கொள்ள சில உதாரணங்களைப் பார்க்கலாம். உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தை (8,848 மீட்டர்) தலைகீழாக இந்தத் துளைக்குள் வைத்தாலும், இன்னும் பல கிலோமீட்டர் ஆழம் மீதம் இருக்கும்.

கடலின் மிக ஆழமான பகுதியான மரியானா அகழியை விட (சுமார் 11 ஆயிரம் மீட்டர்) இது ஆழமானது. உலகின் மிக உயர்ந்த கட்டிடங்களில் ஒன்றாக கருதப்படும் துபாயில் உள்ள புர்ஜ் கலிஃபாவை விடவும் இந்த “கோலா சூப்பர் டீப் போர்ஹோல்” பல ஆயிரம் கிலோமீட்டர் உயரம் கொண்டது.

பூமியில் கிட்டத்தட்ட சுமார் 15 கிலோமீட்டர் வரை துளையிட வேண்டும் என்பதுதான் ரஷ்ய விஞ்ஞானிகளின் இலக்காக இருந்தது. ஆனால், 12.2 கிலோமீட்டர் தொட்ட போதே பூமியின் அடியிற்று வெப்பம், அதில் பணியாற்றியவர்களை மிரட்டத் தொடங்கிவிட்டது.

பூமியின் அந்த ஆழத்திலேயே, சுமார் 180 டிகிரி செல்சியஸ் (356 டிகிரி ஃபாரன்ஹீட்) வெப்ப நிலை இருந்தது. விஞ்ஞானிகள் எதிர்பார்த்ததை விட, இது இரண்டு மடங்கு அதிகம். இந்த அதிக வெப்பத்தினால் துளையிடும் கருவிகள் உருகத் தொடங்கின. அதோடு பாறைகளும் திரவ நிலைக்கு மாறத் தொடங்கின.

அப்படியானால் மனிதர்களின் நிலையை உணர்ந்து கொள்ளுங்கள். இந்த காரணத்தால்தான் 1992-ம் ஆண்டு பூமியை துளையிடும் பணியை ரஷ்யா முழுமையாகக் கைவிட்டது.

இந்த இடத்தை பற்றி “நரகத்தின் வாசல்” என்ற இணையக் கதைகளும் பின்னர் பரவின.”12.2 கிலோமீட்டர் ஆழம் என்பது பூமிக்கு எவ்வளவு பெரியது?” என்ற கேள்வி நமக்குள்ளெழும்பும். அதை புரிந்து கொள்ள ஒரு ஆப்பிளை உதாரணமாக எடுத்துக் கொள்வோம்.

ஆப்பிளை நம்முடைய பூமி என்று கற்பனை செய்து கொள்ளுங்கள். நாம் பூமியில் போட்ட 12.2 கிலோமீட்டர் ஆழம் என்பது, அந்த ஆப்பிளின் மேல் தோலில் ஏற்பட்ட சிறிய கீறலுக்கு சமமானது, அவ்வளவுதான்.

பூமியின் ஆரம் சுமார் 6,371 கிலோமீட்டர். நாம் தோண்டியதோ வெறும் 12.2 கிலோமீட்டர் மட்டுமே. அதாவது பூமியின் மையப்பகுதியை நோக்கி நாம் 0.2 சதவீதம் கூட தோண்டவில்லை.

பூமியின் மறுபக்கத்தைத் தொடுவது தற்போதைய மனித தொழில்நுட்பத்திற்கு சாத்தியமில்லாத ஒன்று என்பதை இந்த ஆராய்ச்சி நமக்கு உணர்த்தியிருக்கிறது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK