தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையில் அவசரநிலை: படுக்கை பற்றாக்குறையால் நோயாளிகள் தவிப்பு..!!
தேசிய பல்கலைக்கழகம் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் ஏற்பட்ட திடீர் நோயாளிகள் நெரிசல் காரணமாக அங்குள்ள நோயாளிகளுக்கு படுக்கை கிடைப்பதில் தாமத நிலை ஏற்பட்டுள்ளது.
அதிகப்படியான நோயாளிகள் வருகை காரணமாக படுக்கை கிடைக்கும் வரை காத்திருக்கும் நோயாளிகளுக்கு உரிய மருத்துவ கண்காணிப்பு மற்றும் சிகிச்சைகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
மாரடைப்பு அறிகுறிகள் கடமையான மூச்சு திணறல் பக்கவாதம் போன்ற உடனடி உயிர்காக்கும் அவசர சிகிச்சைகள் தேவைப்படுகின்ற நோயாளிகளுக்கு தொடர்ந்து முன்னுரிமை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை கூறியுள்ளது.
மாரடைப்பு அறிகுறிகள் கடுமையான மூச்சு திணறல், பக்கவாதம் போன்ற உடனடி உயிர்காக்கும் அவசர சிகிச்சைகள் தேவைப்படுகின்ற நோயாளிகளுக்கு தொடர்ந்து முன்னுரிமை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.
சிறிய அளவிலான காயங்கள் அல்லது லேசான உடல்நல குறைபாடுகளுக்கு (காய்ச்சல் தலைவலி, சளி) அருகில் உள்ள பொது மருத்துவர் அல்லது பாலி கிளினிக்குகளை அணுகுமாறு நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது.
நோயாளிகள் மருத்துவமனைக்கு வருவதற்கு முன்பாக NUHS App மூலமாக அவசர சிகிச்சை பிரிவுகளின் காத்திருப்பு நேரத்தை சரிபார்த்துக் கொண்டு வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் கூடுதல் தகவல்களை அறிந்து கொள்வதற்கு மற்றும் நேரடி அறிவிப்புகளுக்கு National University hospital Facebook page மற்றும் NUHS Patient Care பக்கத்தை பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும் என்று மருத்துவமனை நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
நோயாளிகளுக்கு படுக்கை கிடைப்பதற்கு 40 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டிய நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.