புங்கோலில் பயங்கர கார் விபத்து..!! இணையத்தில் வைரலாகும் வீடியோ பதிவு..!!
சிங்கப்பூர்: புங்கோல் பகுதியில் உள்ள எட்ஜ்டேல் பிளைன்ஸ் பிளாக் 122A அருகே ஒரு கார் விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தை நேரில் பார்த்தவர்கள் ஒரு கார் அதிவேகத்தில் ஒரு டெலிவரி வேனின் மீது மோதியதாகவும, அதன் பிறகு அந்த கார் சாலையில் இருந்து தூக்கி வீசப்பட்டதாகவும் கூறியுள்ளனர்.
ஒரு இணையவாசி இந்த விபத்து குறித்த காணொளியை sgfollowsall என்ற சமூக ஊடக பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். அந்த காணொளியில் லாலாமூவ் விநியோக நிறுவனத்தின் சின்னம் பொறிக்கப்பட்ட ஒரு வேன் அதன் முன்பகுதி ஏற்கனவே போக்குவரத்து தீவில் இருந்த நிலையில் சாலையின் நடுவில் நிறுத்தப்பட்டு இருந்தது காட்டப்படுகிறது.
சாலையின் மறுபுறத்தில் பசுமைப் பகுதியில் மற்றும் நடைபாதையில் முன்பகுதி சேதம் அடைந்த ஒரு கருப்பு நிற செடான் கார் காணப்பட்டது.
36 மற்றும் 39 வயதுடைய காரில் பயணித்த இருவரும் சுயநினைவுடன் சிகிச்சைக்காக சாங்கி பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.
வேனை ஒட்டிய 30 வயது ஓட்டுநருக்கு லேசான காயம் ஏற்பட்டது. ஆனால் அவர் மருத்துவமனைக்கு செல்ல மறுத்து விட்டார்.
விபத்து ஏற்படுத்திய 44 வயது கார் ஓட்டுநர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்பே தப்பித்து ஓடிள்ளார். அவரை கண்டுபிடிக்க சிங்கப்பூர் காவல்துறை தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த விபத்து குறித்த விரிவான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.