அமலாக்கத்துறைக்கு உதவும் AI தொழில்நுட்பம்..!!

அமலாக்கத்துறைக்கு உதவும் AI தொழில்நுட்பம்..!!

AI தொழில்நுட்பம் எல்லா துறைகளிலும் ஊடுருவி வருகிறது. அது வேலைவாய்ப்பு இழப்பை ஏற்படுத்துவது ஒருபுறம் இருந்தாலும் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவில் பல வேலைகளை எளிமையாக்கி உதவி வருகிறது.

பல்வேறு வழக்கு விசாரணைகளுக்கும் ஏ ஐ தொழில்நுட்பம் தற்போது அமலாக்கத் துறையிலும் உதவுகிறது. அமலாக்கத்துறையானது நாட்டின் முக்கியமான பண பரிமாற்ற மோசடி வழக்குகளை விசாரித்து வருகிறது. பல முக்கிய மோசடி வழக்குகளை இந்த நிறுவனமே கண்காணித்து வருகிறது.

சிக்கலான நிதி மோசடிகளில் உண்மை தரவுகளை கண்டறியவும் விசாரணைகளை விரைவு படுத்தவும் பண மோசடி மற்றும் அந்நிய செலாவணி விதிமீறல் தொடர்பான வழக்குகளில் கோர்ட்டுகளில் வலுவான குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்யவும் நவீன தடை அவியல் தொழில்நுட்பம் மற்றும் தரவு பகுப்பாய்வு முறைகளை இந்த மத்திய புலனாய்வு அமைப்பு பயன்படுத்தி வருகிறது.

பல நூறு கோடி மதிப்பிலான மோசடிகளை செய்துவிட்டு இந்தியாவை விட்டு தப்பிச் சென்ற பொருளாதார குற்றவாளிகள் தொடர்பான வழக்குகளிலும் இந்த தொழில்நுட்பம் உதவுகிறது. நிர்வாக சீர்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறை தீர்ப்பு துறை வெளியிட்ட ‘மின்னணு ஆளுகை முயற்சிகளின் தொகுப்பு’ என்ற சமீபத்திய ஆவணத்தில் தனது புலனாய்வு பணிகளில் ஏற்பட்டுள்ள இந்த புதிய முன்னேற்றங்களை அமலாக்க இயக்குனரகம் விவரித்து உள்ளது.

நிதி மோசடிகளில் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பதால் உண்மையான பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து சரி பார்ப்பது சவாலாக இருக்கும். இந்தியாவின் மிகப்பெரிய நிதி மோசடிகளில் ஒன்றான மேற்கு வங்காளத்தின் ‘ரோஸ் வேலி’ வழக்கு இதற்கு உதாரணமாகும்.

இந்த வழக்கில் இதுவரை குறைந்தது 31 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உரிமை கோருபவர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு சொத்துக்களை மீட்டுக் கொடுக்கும் நடைமுறையின் ஒரு பகுதியாக சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் இருந்து, 2025 ஆம் ஆண்டில் ரூ.517.54 கோடி மதிப்பிலான வரைவோலையை பெற்று வழக்கிற்கான சொத்து அகற்றும் குழுவிடம் அமலாக்க இயக்குனரகம் ஒப்படைத்தது.

அவர்கள் உரிமை கோருபவர்களின் தகவல்களை சரி பார்க்க செயற்கை நுண்ணறிவு நுட்பத்தை பயன்படுத்துகிறார்கள். இந்த செயற்கை நுண்ணறிவு உதவியுடனான செயல்பாடு இழப்பீட்டு செயல்முறையை வேகப்படுத்துவது மட்டுமல்லாமல் மனிதப் பிழையின் அபாயத்தையும் நீக்கும் என்று வருமானவரி துறையை சேர்ந்த இந்திய வருவாய் சேவை அதிகாரி மிட்டல் கூறுகிறார்.

மேலும் அது தாமதத்தை தவிர்ப்பதுடன் விசாரணைகளின் துல்லியத்தையும் மேம்படுத்தியுள்ளது என்று அவர் கூறுகிறார். தொழில்நுட்ப உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பயனாக 2025-26 ஆம் ஆண்டில் அமலாக்கத்துறை ரூ.81 ஆயிரத்து 422.63 கோடி மதிப்பிலான சொத்துக்களை முடக்கி உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.