சிங்கப்பூரில் பயங்கர விபத்து..!! 5 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி பரபரப்பு..!!
சிங்கப்பூரின் பான்-ஐலேண்ட் விரைவுச் சாலையில் 5 வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் ஒரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
மேலும் மது போதையில் வாகனம் ஓட்டிய குற்றத்திற்காக 37 வயது கார் ஓட்டுநர் ஒருவரை காவல்துறை கைது செய்துள்ளது.
விபத்தின் போது ஒரு நபர் சாலையில் விழுந்து கிடந்து உள்ளார். காயமடைந்த அந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநரை சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர் மீட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இந்த விபத்தை ஏற்படுத்திய 37 வயதுடைய கார் ஓட்டுநரிடம் காவல்துறை சோதனை நடத்திய போது, அவரிடம் மதுபான வாசனை வீசியதை எடுத்து, அவர் குடிபோதையில் வாகனம் ஓட்டியதன் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான தீவிர விசாரணையை போக்குவரத்து காவல்துறை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.