சிங்கப்பூர் விஞ்ஞானிகளுக்கு சர்வதேச அங்கீகாரம்..!! NUS, NTU பல்கலைக்கழகங்கள் சாதனை!!

சிங்கப்பூர் விஞ்ஞானிகளுக்கு சர்வதேச அங்கீகாரம்..!! NUS, NTU பல்கலைக்கழகங்கள் சாதனை!!

சிங்கப்பூரில் 2026ஆம் ஆண்டுக்கான உலகின் அதிகம் மேற்கோள் காட்டப்பட்ட ஆராய்ச்சியாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தைச் (NUS) சேர்ந்த 37 விஞ்ஞானிகளும், நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தை (NTU) சேர்ந்த 32 விஞ்ஞானிகளும் இடம்பெற்றுள்ளனர்.

தொழில்முறை தகவல் சேவை நிறுவனமான கிளாரிவேட் (Clarivate) இந்தப் பட்டியலை வெளியிட்டுள்ளது. கடந்த பத்தாண்டுகளில் ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட ஆய்வுக் கட்டுரைகள், பிற அறிஞர்களால் எத்தனை முறை மேற்கோள் காட்டப்பட்டுள்ளன என்பதன் அடிப்படையில் அவர்களின் அறிவியல் தாக்கம் மதிப்பிடப்படுகிறது. இதன் மூலம் உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க ஆராய்ச்சியாளர்கள் அங்கீகரிக்கப்படுகின்றனர்.

இந்த ஆண்டுக்கான பட்டியலில் 62 நாடுகள் மற்றும் பிராந்தியங்களைச் சேர்ந்த 1,200-க்கும் மேற்பட்ட நிறுவனங்களும், மொத்தம் 6,802 தனிநபர்களும் இடம்பெற்றுள்ளனர்.
இதுகுறித்து NTU வெளியிட்ட அறிக்கையில், பல்வேறு அறிவியல் துறைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கிய அதன் 32 விஞ்ஞானிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. மேலும், அவர்களின் ஆய்வுகள் மொத்தம் 36 முறை பட்டியலில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன.


இதற்கிடையில், நான்ஜிங் பல்கலைக்கழகம் உலகளாவிய நிறுவனத் தரவரிசையில் மூன்று இடங்கள் முன்னேறி 28வது இடத்தைப் பிடித்துள்ளது.

அதேபோல், NUS வெளியிட்ட அறிக்கையில், வேதியியல், மருத்துவம், கணினி அறிவியல், பொருளாதாரம், வணிகம், பொறியியல், நோயெதிர்ப்பியல், பொருள் அறிவியல், நரம்பியல் மற்றும் இயற்பியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த 37 விஞ்ஞானிகள் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் ஆராய்ச்சித் துறையில் சிங்கப்பூர் பல்கலைக்கழகங்கள் தொடர்ந்து குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி வருவதையே இந்தச் சாதனை எடுத்துக்காட்டுகிறது