உச்சகட்ட கோபம்..!!!அம்பயருடன் 2 முறை வாக்குவாதத்தில் ஈடுபட்ட சுப்மன் கில்...!!

ஹைதராபாத் அணியின் நட்சத்திர வீரர் அபிஷேக் சர்மாவுக்கு நாட் அவுட் கொடுத்து மூன்றாவது நடுவர் முடிவு வழங்கியதை அடுத்து, குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் நடுவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
ஒரு கட்டத்தில் நடுவர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சுப்மன் கில்லை ஹைதராபாத் வீரர் அபிஷேக் சர்மா கட்டுப்படுத்தியது அதிர்ச்சியடையச் செய்தது.
ஐபிஎல் தொடரின் 51வது லீக் ஆட்டத்தில் நேற்று குஜராத் அணியை எதிர்த்து ஹைதராபாத் அணி விளையாடியது.இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த குஜராத் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 224 ரன்கள் எடுத்தது.
கேப்டன் சுப்மன் கில் 76, ஜோஸ் பட்லர் 64, சாய் சுதர்சன் 48 ரன்கள் எடுத்தனர். அடுத்து விளையாடிய ஹைதராபாத் அணி தொடக்கம் முதலே அசத்தலாக பேட்டிங் செய்து 20 ஓவரில் 186/6 ரன்கள் மட்டுமே எடுத்து 7-வது தோல்வியை தழுவியது.
இந்தப் போட்டியில் குஜராத் அணி கேப்டன் சுப்மன் கில் 38 பந்துகளில் 76 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆனார். 3வது நடுவரால் அவுட் கொடுக்கப்பட்டதால் சர்ச்சைக்குள்ளான சுப்மன் கில் டிரஸ்ஸிங் அறைக்கு சென்று 4வது நடுவருடன் நேரடியாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
14வது ஓவரை வீச பிரசித் கிருஷ்ணா அழைக்கப்பட்டார். அந்த ஓவரின் 4வது பந்தை அபிஷேக் சர்மா எதிர்கொண்டபோது, பந்து அவரது கால்களில் பட்டது. குஜராத் அணி வீரர்கள் அவுட் என முறையிட்டபோது, நடுவர் அவுட் கொடுக்கவில்லை.
இதையடுத்து குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் முறையீடு செய்தார்.பின்னர் 3வது நடுவர் பார்த்தபோது, பந்து வீசிய தாக்கம் ஆஃப் சைடுக்கு வெளியே பிட்ச்சிங்கில் இருந்தது தெரிந்தது. ஆனால் அது விக்கெட்டை அடித்ததாகக் காட்டியது.
இதனால், 3வது நடுவர் அம்பயர்ஸ் கால் என்று தீர்ப்பு வழங்கினார்.இதனால் குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் மைதானத்தில் நடுவர்களிடம் கோபமடைந்தார்.
அது ஹிட்டிங் விக்கெட் என்று வந்த பிறகு, நாட் அவுட் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது என்று நீண்ட நேரம் வாதிட்டார்.ஒரு கட்டத்தில் சுப்மன் கில் சில கடுமையான வார்த்தைகளைக் கூறியபோது, அவரது நண்பரும் ஹைதராபாத் நட்சத்திர தொடக்க வீரருமான அபிஷேக் சர்மா அவரைக் கட்டுப்படுத்தினார். இதையடுத்து சுப்மன் கில் கோபத்தில் அங்கிருந்து வெளியேறினார்.

Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilan