சீனா மீதான வரியை குறைக்க முன்வரும் அமெரிக்கா...!!

சீனா மீதான வர்த்தக வரிகள் குறைக்கப்படலாம் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தனது சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.
சீனா மீதான தற்போதைய வரிகளை 145 சதவீதத்திலிருந்து 80 சதவீதமாகக் குறைப்பது பொருத்தமானதாக இருக்கும் என்று அவர் கூறினார்.
இருப்பினும், இது தொடர்பான இறுதி முடிவை கருவூல செயலாளர் ஸ்கோட் பெஸ்ஸண்ட் எடுப்பார் என்று திரு.டிரம்ப் கூறினார்.
திரு.பெஸ்ஸண்ட் மற்றும் அமெரிக்க தலைமை வர்த்தக பேச்சுவார்த்தையாளர் ஜேமிசன் கிரீர் ஆகியோர் சுவிட்சர்லாந்தின் சீன துணைப் பிரதமர் ஹீ லிஃப்வெங்கைச் சந்திக்கின்றனர்.
அமெரிக்கா விதித்த 145 சதவீத வரிகளுக்கு பதிலடியாக சீனாவும் அமெரிக்கப் பொருட்களுக்கு 125 சதவீத வரிகளை விதித்தது.
மேலும் அமெரிக்காவுடனான சீனாவின் வர்த்தக உபரி மார்ச் மாதத்தில் 27.6 பில்லியன் அமெரிக்க டாலர்களிலிருந்து ஏப்ரல் மாதத்தில் 20.5 பில்லியன் அமெரிக்க டாலர்களாக (S$26 பில்லியன்) குறைந்துள்ளது.
இதனால் அதிபர் டிரம்ப் இந்த இடைவெளியை குறைக்க சீனா மீதான வர்த்தக வரியை குறைக்க முன் வந்தார்.
அமெரிக்கா சீனா மீதான வர்த்தக வரிகளைக் குறைப்பதற்கு முன்பு, அமெரிக்கப் பொருட்கள் மீதான வரிகளை சீனா குறைக்க வேண்டும் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilan

