சுமத்திரா காட்டுத்தீயால் வலுப்படும் புகைமூட்டம்...!!!2027 வரை அபாய கணிப்பு...!!!
சிங்கப்பூர்: இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் சிங்கப்பூருக்கும் அதன் அண்டை நாடுகளுக்கும் இடையிலான எல்லை தாண்டிய புகைமூட்ட அபாய அளவை உள்ளூர் பிராந்திய சிந்தனைக் குழு ஒன்று நடுத்தரமாக மட்டத்திற்கு உயர்த்தியுள்ளது.
சிங்கப்பூர் சர்வதேச விவகார நிறுவனம் வெளியிட்ட வருடாந்திர புகைமூட்டக் கண்ணோட்ட அறிக்கை, இந்தோனேசியாவின் சுமத்ராவில் அதிகரித்து வரும் காட்டுத்தீயால் மலாய் தீபகற்பத்தின் பல பகுதிகள் புகைமூட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது.
இருப்பினும், அடுத்த சில மாதங்களில் வறட்சி காலம் முந்தைய பெரும்பாலான வறண்ட காலங்களை விட குறைவாகவும் மிதமாகவும் இருக்கும் என்று வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
வானிலை ஆய்வாளர்கள், வரும் மாதங்களில் வறட்சி நிலை மிதமானதாக இருக்கும் என்றும், காட்டுத் தீ கட்டுப்பாட்டில் இருக்கும் சாத்தியம் அதிகம் என்றும் கணித்துள்ளனர்.
இருப்பினும், 2027-2030 காலப்பகுதியில் வறட்சி மற்றும் தீவிர வெப்ப அலைகள் மீண்டும் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக வானிலை நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.