பெனாய் சாலையில் கார் மோதல்..!!! சிங்கப்பூரை அதிர்ச்சியில் ஆழ்த்திய வீடியோ…!!!

பெனாய் சாலையில் கார் மோதல்..!!! சிங்கப்பூரை அதிர்ச்சியில் ஆழ்த்திய வீடியோ...!!!

சிங்கப்பூர்: சிங்கப்பூரின் பெனாய் சாலையில் இரண்டு கார்கள் மோதிக்கொண்ட விபத்துக்கான காட்சி TikTok பயனர் @prabha.ch4 பதிவிட்ட வீடியோவில் பரவியுள்ளது.

இந்த வீடியோவில் சம்பவ இடத்தில் நிலவும் குழப்ப நிலை தெளிவாகக் காணப்படுகிறது.

வீடியோவில், ஒரு கருப்பு நிற கார் சந்திப்பின் இடது பக்கத்தில் நிறுத்தப்பட்டிருப்பதும், அதன் வலது பக்கம் மோசமாக சேதமடைந்திருப்பதும் காணப்படுகிறது. காரின் பாகங்கள் சம்பவ இடத்தில் சிதறி கிடந்தன. அதேபோல், மற்றொரு சாம்பல் நிறக் காரின் முன்பக்கமும் பெரிதும் சேதமடைந்தது.

இச்சம்பவம் நேற்று (ஆகஸ்ட் 4) மாலை 5.40 மணியளவில் ஜாலான் அகமது இப்ராஹிம் மற்றும் பெனாய் சாலை சந்திப்பில் நடந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய 63 வயது மற்றும் 47 வயது ஆகிய இரு ஓட்டுநர்களும் காவல்துறையினரின் விசாரணைக்கு உதவிவருகின்றனர்.

இச்சம்பவம் தொடர்பான விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan