2025 இல் ஆகஸ்ட் மாதம் சிங்கப்பூர் செல்பவர்களின் கவனத்திற்கு..!!!

2025 இல் ஆகஸ்ட் மாதம் சிங்கப்பூர் செல்பவர்களின் கவனத்திற்கு..!!!

சிங்கப்பூருக்குச் சென்று பணிபுரிய விரும்புகிறீர்களா? இந்த Instructions களை follow பண்ணுங்க..!!!

சிங்கப்பூருக்கு செல்ல வேண்டும் எனில் ஏஜென்ட் உதவியுடனே சென்று வேலை செய்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. ஏஜென்ட்களின் உதவியின்றி சிங்கப்பூருக்கு செல்வது என்பது சற்று கடினமான செயல் தான்.

பணம் செலவில் தான் வேலைக்குச் சென்று வாய்ப்புள்ளது. ஏனெனில் யாரிடமும் தகவல் தெரியாமல் பணம் கொடுத்து ஏமாந்து விடாதீர்கள்.


பின்வரும் முறைகளைத் தெரிந்து கொண்டு சரியான வழிமுறைகளின் படி நம்பிக்கையான Licenced ஏஜென்ட்களிடம் பணம் கொடுத்து சிங்கப்பூர் சென்று வேலை செய்யுங்கள்.

S PASS, E PASS மூலம் செல்வதற்கு பணம் கட்டுவது மாறுதல் அடையும். அதேபோல், SHIPYARD, PCM, WORK PERMIT இல் பணம் செலுத்துவதன் மூலம் ஏற்படும் இடர்பாடுகள் பின்வருமாறு:
💠 அட்வான்ஸ் பணம் செலுத்த தேவையில்லை.

💠அதிகபட்சமாக IP யை வெளியிட்டு விடுவர்.

💠 Approval copy அனுப்பும்போதே ஏஜெண்டுகள் மொத்த தொகையையும் செலுத்த வேண்டும் என கூறுவார்.


💠 அதிகபட்சமாக ஒரு லட்சம் அல்லது 2 லட்சம் வரை மட்டுமே பணம் செலுத்த வேண்டிய அவசியம் இருக்கும்.

💠 மூன்று லட்சத்திற்கு மேல் ஒரு சில ஏஜெண்டுகள் பணம் கேட்டால் செலுத்த வேண்டாம். அதேபோல், IP வந்தவுடன் மொத்த தொகையையும் கட்ட வேண்டிய அவசியமும் இல்லை.

💠IP வந்த பிறகு பாதி தொகையை செலுத்தலாம். ஏனெனில் இதன் பிறகு HOUSING அப்ரூவல் மற்றும் ON BOARDING CENTRE அப்ரூவல் இருக்கிறது.

💠இதில் ON BOARDING CENTRE அப்ரூவல் எளிதாக கிடைத்து விடும். ஆனால் HOUSING அப்ரூவல் கிடைப்பது தற்போது கடினமாக உள்ளது.

 


💠சில நேரங்களில் HOUSING அப்ரூவல் கிடைக்க சில மாதங்கள் ஆகும். அப்போது IP Cancel ஆக கூட வாய்ப்புகள் அதிகம். மேலும், ஏஜெண்டுகளிடம் கொடுத்த பணத்தை திரும்ப பெறுவது ஏற்க கடினமான செயலாகும்.

💠 ஆகையால் மொத்த தொகையையும் IP வந்தவுடன் செலுத்தக்கூடாது.

SHIPYARD, PCM, WORK PERMIT இல் வேலைக்கு செல்ல பணம் செலுத்த வேண்டிய முறைகள்:
🔶IP வந்தவுடன் குறிப்பிட்ட தொகையான 10,000 அல்லது 20,000 ரூபாயை மட்டும் செலுத்தினால் போதுமானது.

 


🔶இதன் பிறகு housing அப்ரூவல் அப்ளை செய்யப்படும். இது வருவதற்கு சில மாதங்கள் கூட ஆகும்.  காரணம்: சிங்கப்பூரில் ரூம் கிடைப்பது சற்று தாமதமாகும்.

🔶Housing அப்ரூவல் வந்த பிறகு பாதி தொகையை நம்பிக்கை உடன் செலுத்தலாம்.

🔶Onboarding centre தான் அடுத்த process.
இதுக்கு வந்த உடன் சிங்கப்பூர் செல்ல டிக்கெட் முன்பதிவு செய்துவிடலாம். மேலும் மொத்த தொகையையும் செலுத்தி விடலாம்.

S PASS, E PASS இல் செல்பவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை:
🔷S PASS, E PASS இல் செல்வர்கள் ஏஜெண்டுகளிடம் தெளிவாக கேட்க வேண்டியது என்னவென்றால் ரிஜெக்ட் ஆகிவிட்டால் கட்டிய தொகையில் எவ்வளவு திருப்பி தருவீர்கள்? என்பதை தெளிவாக கேட்டுக் கொள்வது நல்லது.


🔷 முன்பணம் கேட்டால் குறைந்தபட்ச தொகையான பத்தாயிரம் ரூபாய் செலத்தினால் போதுமானது. அதிகபட்சமாக பணம் செலுத்த வேண்டும் என கூறினால் அது போன்ற வேலைக்கு செல்வதை தவிர்ப்பது நல்லது.

🔷IP வந்ததும் பாதி தொகையை செலுத்தினால் போதுமானது. மேலும் HOUSING அப்ரூவல் வரவேண்டிய அவசியம் இல்ல வெளிநாடு சென்ற பிறகு சொந்த முறையில் நீங்கள் தங்குமிடங்கள் சொந்த முறையில் ஏற்படுத்திக் கொள்ள வாய்ப்புள்ளது.

🔷டிக்கெட் தேதி குறியவுடன் டிக்கெட் முன்பதிவு செய்து கொண்டு முழு தொகையையும் செலுத்திக் கொள்ளலாம்.

இதுபோன்ற பயனுள்ள விவரங்களை தெளிவாக தெரிந்து கொள்ள தெரிந்து கொள்ளவும் மற்றும் வேலை வாய்ப்புகளை உடனுக்குடன் தெரிந்து கொண்டால் நமது இணையதளமான www.sgtamilan.com பக்கத்தைப் பார்த்து பயன்பெறுங்கள்.