புகை பொருள் தயாரித்த நபர் – முதல் வழக்கு விசாரணை..!!

புகை பொருள் தயாரித்த நபர் - முதல் வழக்கு விசாரணை..!!

சிங்கப்பூரில் கடந்த ஆண்டு டிசம்பர் 11ஆம் தேதி அதிகாலையில் யிஷூன் தெரு, 22 பிளாக் 269 B இல் உள்ள 41 வயது நபரின் வீட்டில் இருந்து ஏராளமான மின் சிகரெட் தொடர்பான பொருள்களை அமலாக்க அதிகாரிகள் கைப்பற்றினர்.

மேலும் அந்த நபரின் வீட்டில் ‘Zombie Pods’ தயாரிக்க இந்த பொருட்களை பயன்படுத்தினார் என்பது தற்போது விசாரணையும் தெரியவந்துள்ளது.

41 வயதான முகமது அகில் அப்துல் ரஹீம் அவரது வீட்டில் ‘Zombie Pods’ என்ற பொதுவாக அழைக்கப்படும் எட்டோமிடேட் கொண்ட மின்னணு சிகரெட் தோட்டாக்களை தயாரித்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

இன்று (ஆகஸ்ட் மாதம் ) 13ஆம் தேதி விசாரணையின் போது எட்டு குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார். ஆனால் ‘Zombie Pods’ தயாரித்த குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

மின் சிகரெட் தோட்டாக்கள் மற்றும் தொடர்புடைய உபகரணங்கள் வைத்து இருந்ததாக மூன்று குற்றச்சாட்டுகளுக்கும் விற்பனை நோக்கம் கொண்ட எட்டோமிடேட் கொண்ட 26.4 கிராம் வெள்ளைப் பொடியை வைத்திருந்த குற்றத்தையும் ஒப்புக்கொண்டார்.

இதுபோன்று நான்கு குற்றச்சாட்டுகள் நீதிபதியால் தண்டனையின் போது பரிசீலிக்கப்படும்.

புதிய பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும் போது குடி வரவும் மற்றும் சோதனை சாவடிகள் ஆணையத்திடம் தவறான அறிக்கையை வழங்கியதாக ஒரு குற்றத்திற்கும் பிரதிவாதி குற்றம் சாட்டப்பட்டிருந்த நிலையில் தற்போது அதையும் ஒப்புக்கொண்டிருக்கிறார்.

இந்த குற்றத்திற்கான தண்டனைகளை நீதிபதி இந்த மாதம் (ஆகஸ்ட்) 26 ஆம் தேதி அறிவிப்பார் என கூறப்பட்டுள்ளது. வீட்டில் ‘Zombie Pods’ தயாரித்த முதல் வழக்காகவும் இது உள்ளது.

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan

❤️

Please Keep Supporting Us

It looks like you're using an ad blocker.
Advertising helps us keep this website free for everyone.

Please whitelist our website and reload the page.