உஷார் சிங்கப்பூர் மக்களே..!!! அதிகரித்து வரும் மோசடி கும்பல் மற்றும் போலி நிறுவனங்கள்..!!!
மோசடி கும்பல் வழக்கு – 2 மலேசியர்கள் கைது: காவல்துறை விசாரணையின் போது மோசடி கும்பலின் அறிவுறுத்தல்களை பின்பற்றி திருடப்பட்ட பணத்தை பெறுவதற்காக இரண்டு சந்தேக நபர்களும் சிங்கப்பூருக்கு வந்ததாக தெரியவந்துள்ளது.
மேலும் இரண்டு சந்தேக நபர்களும் இதுபோன்று பல வழக்குகளில் ஈடுபட்டுள்ளதாகவும் மோசடி கும்பலுக்கு உதவி வந்துள்ளதாகவும் மோசடி செய்யப்பட்ட நிதியிலிருந்து லாபம் ஈட்டியதாகவும் தெரியவந்துள்ளது.
கடந்த சனிக்கிழமை (ஆகஸ்ட்) 16ஆம் தேதி 45 வயதுடைய ஒரு நபர் உட்லாந்து சோதனை சாவடிகள் நாட்டிற்குள் நுழைந்த போது கைது செய்யப்பட்டார். மேலும் மற்றொருவர் 39 வயதுடையவர் சைனா டவுனில் உள்ள பேர்ல்ஸ் பிளேஸ் அருகே கைது செய்யப்பட்டார்.
நேற்று (ஆகஸ்ட் 17ஆம் தேதி) ஞாயிற்றுக்கிழமை ஒரு அறிக்கையில் கடந்த மாதம்(ஜூலை) முதல் ஆகஸ்ட் வரை பல மோசடி புகார்கள் அதிகாரிகளுக்கு வந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
மோசடி செய்பவர்கள் சிங்கப்பூர் நாணய ஆணையம் அல்லது காவல்துறை அதிகாரிகள் போல் நடித்து, பாதிக்கப்பட்டவர்கள் அங்கீகரிக்கப்படாத வங்கி பரிவர்த்தனைகள் அல்லது பணமோசடி நடவடிக்கைகள் ஈடுபட்டுள்ளதாக பொய்யாக கூறி, விசாரணைக்கு உதவ பணம் அல்லது மதிப்புமிக்க பொருட்களை ஒப்படைக்குமாறு கேட்டுக் கொண்டதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது போன்ற மோசடி வழக்கின் மூலம் பாதிக்கப்பட்டவர்களை விசாரணைத்த பொழுது தெரியவந்துள்ள தகவலானது: அறிவுறுத்தல்களின் பேரில் மோசடி செய்பவர்களால் நியமிக்கப்பட்ட வங்கி கணக்கிற்கு பணத்தை மாற்றியுள்ளதாகவும் பணம் தங்க கட்டிகள் மற்றும் ஆடம்பர கடிகாரங்களை நேரில் சென்று வழங்கியதாகவும் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.
விசாரணைக்கு பிறகு, மோசடி தடுப்பு பிரிவு குடிவரவு மற்றும் சோதனை சாவடிகள் ஆணையத்தின் உதவியுடன் இந்த வழக்கில் தொடர்புடைய இரண்டு மலேசியா ஆண்களை அடையாளம் கண்டது.
குற்றச் செயல்களில் இருந்து மற்றவர்களுக்கு லாபம் ஏற்ற சதி செய்ததாக இரண்டு மலேசியா ஆண் சந்தேக நபர்கள் மீதும் குற்றம் சாட்டப்படும் எனவும் கூறியுள்ளனர்.
இந்த வழக்கு குறித்து இன்று திங்கள்கிழமை (ஆகஸ்ட்) 18ஆம் தேதி நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும். மேலும், குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது 5,00,000 யுவான் வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போலி நிறுவனம் மோசடி வழக்கில் பெண் கைது செய்யப்பட்ட காரணம்: மற்றொரு வழக்கான போலி நிறுவனங்களை பயன்படுத்தி 600க்கும் மேற்பட்ட சிம்கார்டுகளை பெற்றதாக சாங்கி விமான நிலையத்தில் ஆகஸ்ட் 17ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 32 வயது உள்ளூர் பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
முதற்கட்ட விசாரணையின் போது, அந்தப் பெண் மற்றவர்களின் உதவியுடன் ஒரு போலி நிறுவனத்தை பதிவு செய்ததாகவும் பின்னர் இந்த ஆண்டு ஜூன் முதல் ஜூலை வரை சிம்பா டெலிக்காமல் இருந்து 600க்கும் மேற்பட்ட போஸ்ட் பெய்டு சிம் கார்டுகளுக்கு விண்ணப்பித்துள்ளதாகவும் தெரியவந்தது.
பின்னர் அவர் இந்த சிம் கார்டுகளை அடையாளம் தெரியாத நபர்களிடம் கொடுத்து ஒரு கார்டிற்கு 40 முதல் 48 யுவான் வரை லாபம் ஈட்டியதாகவும் தெரியவந்துள்ளது.
இந்த குற்றத்திற்காக திங்கட்கிழமை இன்று(ஆகஸ்ட்) 18 ஆம் தேதி அந்த பெண் நீதிமன்றத்தில் ஆஜராவார். அதிகபட்ச தண்டனை 3 ஆண்டுகள் சிறை தண்டனை $10,000 அபராதம் அல்லது இரண்டும் ஆகும்.
இந்த இரண்டு வழக்குகளைப் பொருத்தும் பொதுமக்களிடம் அதிகாரிகள் கூறிய அறிவுரையானது: பொதுமக்கள் பணம் உள்ளது மதிப்புமிக்க பொருட்களை அடையாளம் தெரியாத நபர்களிடம் ஒப்படைக்க வேண்டாம் என்றும் அந்நியர்கள் சேகரிக்க நியமிக்கப்பட்ட இடங்களில் பணத்தை வைக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும் அரசு அதிகாரிகள் ஒருபோதும் பண பரிமாற்றங்களை கூற மாட்டார்கள் வங்கி கணக்கு உள் நுழைவு தகவலை கேட்க மாட்டார்கள். அதிகாரப்பூர்வமற்ற விண்ணப்பங்களை நிறுவக் கோர மாட்டார்கள் அல்லது தொலைபேசியில் “காவல்துறைக்கு” அழைப்புகளை மாற்ற மாட்டார்கள் என்பதையும் காவல்துறை பொதுமக்களுக்கு நினைவூட்டியது.