புதிய திட்டம் நடைமுறைக்கு வந்தால் எல்லை தாண்டும் பயணம் சுலபமாகுமா..??

புதிய திட்டம் நடைமுறைக்கு வந்தால் எல்லை தாண்டும் பயணம் சுலபமாகுமா..??

சிங்கப்பூர்:சிங்கப்பூரில் நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) எல்லை தாண்டிய Point to Point போக்குவரத்து சேவைகளை மேம்படுத்துவதற்கான வழிகளை ஆராய்ந்து வருகிறது. இதில் நியமிக்கப்பட்ட ஏறுதல்/இறங்குதல் இடங்களில் விரைவான சுங்க அனுமதி நடைமுறைகள் உள்ளிட்டவை சேர்க்கப்படலாம்.

கடந்த வாரம் போக்குவரத்து அமைச்சர் சியூ சின் சியோங்,இணை அமைச்சர் சன் சூலிங்,போக்குவரத்து அமைச்சகம் மற்றும் LTA அதிகாரிகள், தேசிய டாக்ஸி சங்கம், தேசிய தனியார் வாடகை ஓட்டுநர்கள் சங்கம் (NPHVA), சிங்கப்பூர்-ஜோகூர் டாக்ஸி சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளை சந்தித்தனர்.

விவாதத்தில் முன்வைக்கப்பட்ட முக்கிய பரிந்துரைகள்:

💠உரிமம் பெற்ற எல்லை தாண்டிய டாக்சிகளின் எண்ணிக்கையை அதிகரித்தல்

💠பல்வேறு வகை டாக்சிகளை இயக்க அனுமதி வழங்குதல்

💠முன்பதிவு சேவைகளுக்காக தள நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுதல்


அதே நேரத்தில் சட்டவிரோத எல்லை தாண்டிய டாக்சி நடவடிக்கைகளைத் தடுக்கும் நடவடிக்கைகள், ERP 2.0 மின்னணு கண்காணிப்பு போன்ற தொழில்நுட்ப உதவிகளும் பரிந்துரைக்கப்பட்டன. விதிமுறைகளை மீறும் வெளிநாட்டு வாகனங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் LTA உறுதியளித்துள்ளது.

பங்கேற்பாளர்கள், பெரிய குடும்பங்கள், முதியவர்கள் மற்றும் எல்லை தாண்டி வணிகம் செய்யும் தொழிலதிபர்களின் தேவைகளை தற்போதைய சேவைகள் பூர்த்தி செய்ய முடியவில்லை என்பதை ஒப்புக்கொண்டனர். ஆனால், இச்சேவைக்கு பணம் செலுத்தத் தயாராக உள்ள பயணிகளும், வழங்கத் தயாராக உள்ள ஓட்டுநர்களும் இருப்பதை வலியுறுத்தினர்.

LTA, உள்ளூர் ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில், சட்டப்பூர்வமான மற்றும் பாதுகாப்பான போக்குவரத்து விருப்பங்களை உருவாக்குவது தான் பொதுவான குறிக்கோள் என தெரிவித்துள்ளது. மேலும், சிங்கப்பூர்-மலேசிய அதிகாரிகள் தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டிருப்பதாகவும் கூறியுள்ளது.

 

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan