காவல்துறை பள்ளிவாசலுக்கு பன்றி மாமிசத்தை பொட்டலத்தில் வைத்து அனுப்பியதாக சந்தேகத்தின் பெயரில் மறுநாள் (செப்டம்பர்) 25ஆம் தேதி 61 வயது சீன ஆடவரைக் கைது செய்தது.
இந்த சம்பவம் வேண்டுமென்றே இன உணர்வுகளை புண்படுத்தும் நோக்கத்தோடு செய்ததாக அவர்மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதே போன்ற சம்பவங்கள் சிங்கப்பூரில் உள்ள இன்னும் சில பள்ளிவாசல்களில் நடந்துள்ளது. இதற்கு காரணம் கைது செய்யப்பட்ட நபர் ஆவார். இந்த தகவல் ஆனது, முதற்கட்ட விசாரணையின் போது தெரியவந்தது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், அபராதமும் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.