வெள்ளத்தில் தத்தளித்த கிளெமென்டி மால்..!!! காரணம்..???

வெள்ளத்தில் தத்தளித்த கிளெமென்டி மால்..!!! காரணம்..???

சிங்கப்பூர்:சிங்கப்பூரில் உள்ள கிளெமென்டி மாலில் நேற்றிரவு(08.10.25)திடீரென ஏற்பட்ட வெள்ளத்தால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

மாலில் இரவு சுமார் 8.25 மணியளவில் முதல் மாடியில் உள்ள ஒரு குத்தகைதாரர் பிரிவின் வடிகால் அமைப்பில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக சில பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.

இது தொடர்பான புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன. சில பகுதிகளில் தரைத்தளம் வழுக்கும் தன்மை பெற்றிருந்ததாகவும், நடந்து செல்ல முடியாத அளவுக்கு தண்ணீர் தேங்கியிருந்ததாகவும் இணையவாசிகள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், இணையவாசிகள் சிலர் பேக்கரியின் கழிவுநீர் குழாய் வெடித்திருக்கலாம் என்று சந்தேகப்படுவதாக கருத்துகளை பகிர்ந்தனர்.

இச்சம்பவம் குறித்து மால் நிர்வாகம் கூறியதாவது,எங்கள் குழுவும் நியமிக்கப்பட்ட ஒப்பந்ததாரர்களும் உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று பழுது பார்ப்புப் பணிகளை மேற்கொண்டனர். நிலைமை விரைவாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.மேலும் வணிக செயல்பாடுகள் எந்தவித பாதிப்பும் அடையவில்லை என்று தெரிவித்தது.

மேலும் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பே முக்கியம் என்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளும் உடனடியாக மேற்கொள்ளப்பட்டதாக நிர்வாகம் தெரிவித்தது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK