உஷார் மக்களே!! அழகு பராமரிப்பு நிலையம் மீது புகார்கள்? ஏன்?

உஷார் மக்களே!! அழகு பராமரிப்பு நிலையம் மீது புகார்கள்? ஏன்?

கடந்தாண்டு(2024) ஆகஸ்ட் முதல் இந்த மாதம் (அக்டோபர்) வரை அழகு பராமரிப்பு நிலையங்களுக்கு எதிராக புகார்கள் எழுந்துள்ளது.

இதுகுறித்து சிங்கப்பூர் பயனீட்டாளர் சங்கம்(CASE) DNA Brands Co என்கின்ற அழகு பராமரிப்பு நிறுவனத்திற்கு எதிராக எழுந்துள்ள புகார்கள் குறித்து பொதுமக்களை எச்சரித்துள்ளது.

இந்த நிறுவனம் நடத்துகின்ற அழகு பராமரிப்பு நிலையங்களின் பெயர்கள்:
👉Beauttique
👉The Mineral Boutique

நிறுவனமானது வாடிக்கையாளர்களை தவறான முறையில் நடத்தியதற்காகவும் சேவையை பெறுவதற்கு மிகவும் அழுத்தம் கொடுத்ததற்காகவும் இந்த புகார்கள் எழுந்துள்ளது.

கிட்டத்தட்ட 53 புகார்கள் ஒரே ஆண்டில் அழகு பராமரிப்பு நிலையத்தின் மீது வந்துள்ளது.

புகார் கொடுத்தவர்களில் 50% பேர் $10,000க்கும் அதிகமான பணத்தை செலவுபடுத்தியதாக கூறியுள்ளனர்.

ஒரு வாடிக்கையாளர் மட்டும் கிட்டத்தட்ட $370,000 இழந்துள்ளதாக கூறியுள்ளார்.

அழகு நிலையத்திற்கு வரும் வாடிக்கையாளர்கள் மொத்தமாக செலவழித்த தொகையானது $980,000 ஆகும் என்று CASE கூறியுள்ளது.

அங் மோ கியோ, ஆர்ச்சர்ட் பிளாசா, தோ பயோ, திசென்டர் பாயிண்ட் போன்ற இடங்களில் உள்ள இந்த அழகு பராமரிப்பு நிலையங்கள் குறித்தும், NEX, Jewel, Wheelock Place ஆகிய இடங்களில் இருக்கும் The Mineral Boutique கடைகள் குறித்தும் புகார்கள் எழுந்துள்ளதாக CASE தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்களில் 40 சதவீதம் பேர் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள்.

இந்த சம்பவம் குறித்து சிங்கப்பூர் போட்டித் தன்மை பயனீட்டாளர் ஆணையம் மேலும் விசாரணை நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளது.

CASE அறிவுறுத்தியது: வாடிக்கையாளர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK