படிக்கட்டில் வெட்டப்பட்ட நிலையில் பூனை சடலம் ..!!யார் செய்தது..?
சிங்கப்பூர்:ஆயர் ராஜா கிரசென்ட்டில் உள்ள ஜேடிசி லாஞ்ச்பேடின் 81வது தொகுதி படிக்கட்டில், பாதியாக வெட்டப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஒரு பூனை இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
பூனை நலச் சங்கம் (Cat Welfare Society) இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறது. அவர்கள் வெளியிட்ட தகவலின்படி, அக்டோபர் 14ஆம் தேதி அசாதாரணமான மற்றும் சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் பூனை இறந்து கிடந்தது.
சங்கம் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளதுடன், சம்பவம் குறித்து சிசிடிவி காட்சிகள் அல்லது தகவல்கள் கொண்ட சாட்சிகள் முன்வருமாறு கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், வெளியிடப்பட்ட புகைப்படங்களில், பூனை படிக்கட்டு நுழைவாயிலில் கிடந்தது தெரிகிறது.
சம்பவம் குறித்து தகவல் அளித்த நபரை சங்கம் தொடர்பு கொண்டுள்ளதாகவும், தற்போது கிடைத்துள்ள தகவல்களை வரிசைப்படுத்தி ஆய்வு செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.