சிங்கப்பூரில் குழந்தைகளுக்காக தொடங்கப்பட்ட புதிய முயற்சி..!!!
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் தங்கள் குழந்தைகளுக்கு பாதுகாப்பான மற்றும் வளர்ச்சி நிறைந்த வீட்டுச் சூழலை உருவாக்க உதவ, ஆரம்பகால குழந்தைப் பருவ மேம்பாட்டு ஆதரவுத் திட்டமான KidSTART சிங்கப்பூரும், மக்கள் செயல் கட்சி சமூக அறக்கட்டளையும் (PCF) புதிய முயற்சியை தொடங்கியுள்ளன.
இந்த திட்டத்தை படிப்படியாக செயல்படுத்த, இரண்டு நிறுவனங்களும் மூன்று ஆண்டுகளில் மொத்தமாக S$410,000 மேல் முதலீடு செய்யவுள்ளன.
கிட் ஸ்டார்ட் ஸ்பார்க்கிள் ஹோம்ஸ் திட்டத்தின் கீழ் பயனாளி குடும்பங்கள் தங்கள் குழந்தைகளுக்கு பாதுகாப்பான மற்றும் கற்றலுக்கு ஏற்ற வீட்டை உருவாக்க உதவும் வகையில், குழந்தை மேம்பாட்டுப் பொருட்கள் மற்றும் வீட்டு உபகரணங்களில் S$1,500 வரை பெறுவார்கள்.
இந்த திட்டத்தின் தொடக்க விழா இன்று (18.10.25) ஹார்பர்ஃபிரண்ட் மையத்தில் நடைபெற்றது. இதில் 60 குடும்பங்கள் பங்கேற்றனர். கலந்து கொண்ட ஒவ்வொரு குடும்பமும் குழந்தை வளர்ச்சி,கல்வி கருவிகள் மற்றும் அன்றாட தேவைகளை வாங்க S$300 பெற்றனர்.
விழாவிற்குத் தலைமை தாங்கிய டிஜிட்டல் மேம்பாடு மற்றும் தகவல் அமைச்சர் ஜோசபின் தியோ, PAP சமூக அறக்கட்டளை மேலாண்மை கவுன்சிலின் தலைவரும் ஆவார். அவர் கூறுகையில், ஒவ்வொரு பாதுகாப்பான வீடும் குழந்தைகளின் ஆரம்பகால வளர்ச்சியின் அடித்தளமாகும்.இது குழந்தைகளை மிகவும் பாதுகாப்பாக உணரவும், ஆராய்ந்து கற்றுக்கொள்ள அதிக விருப்பத்துடன் இருக்கவும் உதவுவதாக கூறினார்.