நெட்டிசன்களை கவர்ந்த வெளிநாட்டு ஊழியரின் செயல்..!!!

நெட்டிசன்களை கவர்ந்த வெளிநாட்டு ஊழியரின் செயல்..!!!

சிங்கப்பூர்:சிங்கப்பூரில் ஒரு வெளிநாட்டு ஊழியர் செய்த செயல் நெட்டிசன்களின் பாராட்டையும் கவனத்தையும் பெற்றுள்ளது.

வியாழக்கிழமை மாலை 6:55 மணியளவில், வெளிநாட்டு ஊழியர் ஒருவர் சாலையில் கிடந்த பை மற்றும் குப்பைகளை விரைவாக சாலையின் ஓரத்துக்கு நகர்த்தி, பொதுமக்கள் மற்றும் வாகன பயனாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்தார்.

சாலையில் கிடந்த பொருட்களை பார்த்ததும் அவர் உடனடியாக லாரியில் இருந்து குதித்து மற்ற சாலைப் பயனாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக சாலையை சரிசெய்ய உதவினார்.

அவரது இந்தச் செயலை நெட்டிசன்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

இந்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் பதிவேற்றப்பட்டு 2,000க்கும் மேற்பட்ட லைக்குகளைப் பெற்றது.

நெட்டிசன்கள் தொழிலாளியின் தைரியத்தையும் கருணையையும் பாராட்டினர். ஒரு நெட்டிசன், “புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பாதுகாப்பை நாம் உறுதி செய்ய வேண்டும் என்பதற்கான நினைவூட்டல் இது” என்று கருத்து தெரிவித்துள்ளார்.

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK