செம்பவாங் பூங்கா நீரில் மிதந்த இளைஞரின் உடல்..!! கொலையா.. தற்கொலையா..

செம்பவாங் பூங்கா நீரில் மிதந்த இளைஞரின் உடல்..!! கொலையா..?? தற்கொலையா..??

சிங்கப்பூர்: செம்பவாங் பூங்கா அருகே நீரில் மிதந்து கொண்டிருந்த 23 வயது இளைஞர் ஒருவரை சமீபத்தில் கண்டெடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த சிவில் பாதுகாப்புப் படையினர், அவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார் என்று அறிவித்தனர்.

சிங்கப்பூர் காவல்துறை செய்தியின்படி, நேற்று (20.10.25) பிற்பகல் 2:20 மணியளவில் செம்பவாங் பூங்காவின் கரைக்கு அருகிலுள்ள நீரில் உடல் கண்டெடுக்கப்பட்டு மீட்கப்பட்டது.

முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில், கொலையாக சந்தேகப்படவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும் தற்கொலைக்கான எண்ணம் தூண்டப்பட்டால் சிங்கப்பூர் மீட்பு சங்கம் 24 மணி ஹாட்லைன் 1767 என்ற எண்களை தொடர்பு கொள்ளவும்,24 மணி நேர பராமரிப்பு SMS/WhatsApp சேவையை 9151 1767 அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK