சிங்கப்பூர்:சிங்கப்பூரில் பல்வேறு மோசடி குற்றங்களில் ஈடுபட்டதாக சந்தேகப்படும் 249 ஆண்கள் மற்றும் பெண்களை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். அவர்களில் ஆக இளையவருக்கு 16 வயது என்று கூறப்படுகிறது.
வணிக விவகாரத்துறை மற்றும் 7 காவல் நிலையங்கள் இணைந்து இந்த மாதம் 10 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை இரண்டு வார அமலாக்க நடவடிக்கையில் ஈடுபட்டது.இதில் 16 முதல் 81 வயதுக்குட்பட்ட 90 பெண்கள் மற்றும் 159 ஆண்கள் விசாரிக்கப்பட்டனர்.
அவர்கள் 800க்கும் மேற்பட்ட மோசடி வழக்குகளில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டோர் சுமார் S$ 3.82 மில்லியனுக்கு மேல் இழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
மோசடிகள் மின்னணு வணிகம், நண்பர்களை போல ஆள்மாறாட்டம் செய்தல், அரசு அதிகாரிகளை போல ஆள்மாறாட்டம் செய்தல், வேலை தேடுதல், முதலீடு மற்றும் வாடகை மோசடிகளை உள்ளடக்கியது.