சிங்கப்பூர்: சிங்கப்பூரில் உட்லேண்ட்ஸ் அவென்யூ 1க்கு அருகிலுள்ள தொழிலாளர் விடுதியில், போதைப்பொருள் கடத்தல் மற்றும் போதைப்பொருள் பயன்பாடு தொடர்பான சந்தேகத்தின் பேரில் நான்கு வெளிநாட்டு ஆண்கள் கைது செய்யப்பட்டனர்.
மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு (CNB) அதிகாரர்கள் புதன்கிழமை (22.10.25) நடத்திய அதிரடி சோதனையில் 24 முதல் 36 வயதுக்குட்பட்ட நான்கு சந்தேக நபர்களைக் கைது செய்தனர்.
அவர்களில் ஒருவர் போதைப்பொருள் கடத்தல் சந்தேகத்திற்குரிய 32 வயதுடைய நபர், 24, 30 மற்றும் 36 வயதுடைய மற்ற மூவர் போதைப்பொருள் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்பட்டனர்.
சோதனையில் சுமார் 68 கிராம் கஞ்சா, 18 கிராம் மெத்தம்பேட்டமைன், 29 யாபா மாத்திரைகள்(ஒரு தூண்டுதல் மருந்து) மற்றும் பல போதைப்பொருள் உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.