சைனாடவுன் கொலை வழக்கு..!! குற்றவாளிக்கு மரண தண்டனை கிடைக்குமா..??
சிங்கப்பூர்:சைனாடவுன் ஹோட்டலில் இந்தோனேசிய ஆடவர் ஒருவர் தனது மனைவியைக் கொன்றதாக சந்தேகிக்கப்படுகிறது.
இதனால் அவர் மீது இன்று(25.10.25) நீதிமன்றத்தில் கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டது.41 வயதான பிரதிவாதி சலேஹுதீன் சிவப்பு நிற மேலாடை அணிந்து காணொளி மூலம் நீதிமன்றத்தில் ஆஜரானார். அவர் அமைதியாகத் தோன்றினார், இந்தோனேசிய மொழிபெயர்ப்பாளர் மூலம் நீதிபதியின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.
அவர் இந்தியோனேசியாவில் விசாரணைக்காக அனுமதி கேட்டார்.அதற்கு பதிலளித்த நீதிபதி, பிரதிவாதி இப்போதுதான் கைது செய்யப்பட்டிருப்பதாலும், வழக்கு இன்னும் ஆரம்ப கட்டத்தில் இருப்பதால், இந்த நேரத்தில் எந்த விண்ணப்பத்தையும் பரிசீலிக்கப் போவதில்லை என்று கூறினார்.
பின்னர் நீதிபதி அவருக்கு ஒரு வழக்கறிஞரை நியமிக்கவும், மனநல மதிப்பீட்டிற்கு மூன்று வாரங்கள் காவலில் வைக்குமாறு அரசு தரப்பு விடுத்த விண்ணப்பத்தை அங்கீகரித்தார்.