சிங்கப்பூரை உலுக்கிய அதிகாலை விபத்து..!! என்ன நடந்தது..??
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் சிலேதார் விரைவுச்சாலை (SLE) நோக்கிச் செல்லும் தெம்பனிஸ் விரைவுச்சாலையில் (TPE) ஒரு கார் தீப்பிடித்து எரிந்ததில் ஒருவர் உயிரிழந்தார்.
Roads.sg பேஸ்புக்கில் பதிவேற்றப்பட்ட காணொளியில், நெடுஞ்சாலையின் பக்கத்தில் நிறுத்தப்பட்டிருந்த வெள்ளை நிற செடான் வாகனம் தீப்பிடித்து முழுவதும் எரிவதைக் காட்டுகிறது.
தீ மிகுந்த தீவிரத்துடன் பரவியதால், வாகனம் முழுமையாக எரிந்தது.பின்னர் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தது.
சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை, இன்று (31.10.25) அதிகாலை 2.55 மணியளவில், மத்திய விரைவுச் சாலை (CTE) வெளியேறும் இடத்திற்கு அருகில், சிலேதார் விரைவுச்சாலையை நோக்கிச் செல்லும் தெம்பனிஸ் விரைவுச்சாலை சந்திப்பில் தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவித்தது.
போலீசார் கூறியதாவது, அதிகாலை 2.50 மணியளவில் சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததாகவும், கார் சறுக்கி விழுந்த பின்னர் தீப்பிடித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
சிவில் பாதுகாப்புப் படையினர் நீர் ஜெட்டைப் பயன்படுத்தி தீயை அணைத்தனர்.மருத்துவ குழுவினர் சம்பவ இடத்துக்குச் சென்றபோது, ஒருவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இந்த விபத்தில் சம்பந்தப்பட்ட கார் BMW என அறியப்படுகிறது.
தீ அணைக்கப்பட்டதும், நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) காலை 6.20 மணிக்கு சமூக ஊடக தளமான X-இல், சிலேதார் விரைவுச்சாலை வெளியேறும் பாதை மூடப்பட்டதாக அறிவித்தது.
ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, மத்திய விரைவுச் சாலை (CTE) வெளியேறும் வழியும் மூடப்பட்டிருப்பதாக மேலும் ஒரு செய்தி வெளியிடப்பட்டது.