இனி மோசடிகளுக்கு முற்றுப்புள்ளி..!!மெட்டா களமிறக்கும் புதிய ஆயுதம்..!!!
சிங்கப்பூர்:சிங்கப்பூரர்களை மோசடிகளிலிருந்து பாதுகாக்கும் நோக்கில் மெட்டா நிறுவனம் தனது வாட்ஸ்அப் மற்றும் மெசஞ்சர் செயலிகளில் புதிய பாதுகாப்பு அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதன்படி, அறிமுகமில்லாத நபருடன் வீடியோ அழைப்பின்போது திரையைப் பகிரும் சமயங்களில் வாட்ஸ்அப்பில் எச்சரிக்கை செய்தி தோன்றும்.
இந்த புதிய பாதுகாப்பு முயற்சிகள் அனைத்தும் மோசடிகளுக்கு எதிராக மெட்டா மேற்கொண்டு வரும் தொடர்ச்சியான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகும் என்று மெட்டாவின் சிங்கப்பூர் மற்றும் ஆசியான் பொது கொள்கைத் தலைவர் கிளாரா கோ தெரிவித்துள்ளார்.