கட்டுமான தளங்களில் அமலுக்கு வரும் புதிய பாதுகாப்பு விதி..!!

கட்டுமான தளங்களில் அமலுக்கு வரும் புதிய பாதுகாப்பு விதி..!!

சிங்கப்பூர்:சிங்கப்பூரில் கட்டுமானத் தளங்களில் தீ அபாயத்தை குறைக்கும் நோக்கில் வெல்டிங் மற்றும் பிற வெப்பத்தை உருவாக்கும் பணிகள் பாதுகாப்பு வலைகளிலிருந்து குறைந்தது மூன்று மீட்டர் தூரத்தில் மேற்கொள்ளப்பட வேண்டும் என குடிமைத் தற்காப்புப் படை (SCDF) மற்றும் மனிதவள அமைச்சகம் (MOM) அறிவித்துள்ளன.

இது தீப்பாதுகாப்பைக் கடுமையாக்கும் முக்கிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எனவும் அவை தெரிவித்தன. இந்த தூரத்தைப் பின்பற்ற முடியாத சூழலில், பாதுகாப்பு வலைகள் வெப்பத்தை தாங்கக்கூடிய சிறப்பு பொருட்களால் தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும்.

ஹாங்காஙில் ஏற்பட்ட அண்மைய பெரிய தீ விபத்தில் ஏழு குடியிருப்பு கட்டடங்கள் முழுவதும் தீப்பற்றி, குறைந்தது 160 பேர் உயிரிழந்தனர்.

இந்த சம்பவத்தை ஒரு கடும் எச்சரிக்கையாக எடுத்துக்கொண்ட அதிகாரிகள், ஹாங்காங் விபத்திலிருந்து பாடம் கற்றுக்கொள்வதாகவும், சிங்கப்பூரின் தீ பாதுகாப்பு அமைப்பை மேலும் வலுப்படுத்தும் வழிகளைத் தொடர்ந்து ஆராய்ந்து வருவதாகவும் தெரிவித்தனர்.

எந்த கட்டுமான மேம்பாட்டு பணிகளும் அதிகாரிகளின் அனுமதியுடன் மட்டுமே செய்யப்பட வேண்டும்.குறிப்பாக வெல்டிங் போன்ற வெப்ப பணிகள் திறந்த, மறைப்பு இல்லாத இடங்களில் மேற்கொள்ளப்பட வேண்டும். மேலும், கட்டுமான தளங்களில் பயன்படுத்தப்படும் பாதுகாப்பு வலைகள் காற்றோட்டத்தையும் வெளியேறும் பாதைகளையும் தடுக்கக்கூடாது.

முகப்பு பொருட்கள், தளத்தில் தீ அபாய கட்டுப்பாடுகள், கட்டுமான நடைமுறைகள் ஆகியவற்றை ஒழுங்குபடுத்தும் கடுமையான விதிகள் ஏற்கனவே இருந்தாலும், சமீபத்திய சம்பவங்கள் தீ பாதுகாப்பு நடைமுறைகளை மேலும் வலுப்படுத்த வேண்டிய அவசியத்தை நினைவூட்டுவதாக அதிகாரிகள் கூறினர்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK