அதிர்ச்சி..!! சாங்கி விமான நிலையத்தில் சிறுமி மானபங்கம்..!!!

அதிர்ச்சி..!! சாங்கி விமான நிலையத்தில் சிறுமி மானபங்கம்..!!!

சிங்கப்பூர்:சாங்கி விமான நிலையத்தில் 6 வயது சிறுமியை மானபங்கம் செய்ததாக அமெரிக்காவைச் சேர்ந்த 46 வயது ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

நேற்று முன்தினம் மாலை 4.50 மணிக்கு முன்றாம் முனையத்தின் இடைவழிப் பகுதியில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்ததாக காவல்துறை தெரிவித்தது.

சிறுமியும் தாயாரும் இருக்கையில் உறங்கிக் கொண்டிருந்த நிலையில், திடீரென்று விழித்த தாய், அந்த நபர் தன் குழந்தையிடம் தகாத முறையில் நடந்துகொள்வதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். ஆடவர் உடனடியாக அங்கிருந்து தப்பிச் சென்றார்.

தாயின் புகாரின் பேரில், கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்த அதிகாரிகள், வெறும் 4 மணி நேரத்திலேயே சந்தேக நபரை அடையாளம் கண்டு கைது செய்தனர்.

46 வயது அமெரிக்கர் மீது இன்று(11.12.25) நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுகிறது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சம் ஐந்து ஆண்டு சிறை தண்டனை அபராதம் மற்றும் பிரம்படி விதிக்கப்படலாம்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK