பயணிகளின் வாக்குவாதத்தால் உடைந்த பேருந்து கண்ணாடி..!!
சிங்கப்பூரில் பேருந்து சேவை எண் 190 வில் பயணம் செய்த சக பயணி இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
38 வயதை சேர்ந்த குஸ்டாஸா கமருதீன் மதுபானம் குடித்திருந்த நிலையில் மாலை 6:40 மணிக்கு ஆர்ச்சர்ட் சாலையில் உள்ள பேருந்து நிறுத்தம் ஒன்றில் இறங்கிய போது சகப்பயணி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
பேருந்தில் இருந்து இறங்கிய கமருதீன் பார்த்து சக பயணி ஒருவர் தவறான சைகை காட்டியதால் கோபமடைந்து பேருந்து மீது பாட்டிலை எடுத்து வீசி உள்ளார்.
பேருந்து கண்ணாடி உடைந்ததில் 57 வயதை சேர்ந்த பெண் பயணி காயமடைந்தனர். முகத்தில் காயங்கள் ஏற்பட்டு தையல் போட வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த சம்பவமானது ஜூலை மாதம் 5 ஆம் தேதி நடந்தது.
சம்பவம் நடந்த மூன்று நாட்கள் பிறகு கமருதீன் கைது செய்யப்பட்டார். இவர் ஒரு சிங்கப்பூர் குடிமகன். தண்டனை காலம் முடிந்து வெளியில் வந்த இவர் மது பாட்டில் ஒன்றை திருடியுள்ளார்.
எனவே கடந்த புதன்கிழமை (டிசம்பர் 16) கமருதீன் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டு தற்போது அவருக்கு டிசம்பர் 24ஆம் தேதி தண்டனை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.