அதிர்ச்சி..!! ஜூரோங் வெஸ்ட்டில் கத்தி முனையில் அரங்கேறிய கொள்ளைச் சம்பவம்..!!!

அதிர்ச்சி..!! ஜூரோங் வெஸ்ட்டில் கத்தி முனையில் அரங்கேறிய கொள்ளைச் சம்பவம்..!!!

சிங்கப்பூர்:சிங்கப்பூரின் ஜூரோங் வெஸ்ட் பகுதியில் கரம்பிட் கத்தியைப் பயன்படுத்தி கொள்ளையடித்ததாகக் கூறப்படும் 17 வயது சிறுவன் மீது இன்று (20.12.25) நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும்.

ஜூரோங் வெஸ்ட் ஸ்ட்ரீட் 93 பகுதியில், கடந்த 18ஆம் தேதி இரவு சுமார் 10.35 மணியளவில் ஆயுதமேந்திய கொள்ளை சம்பவம் ஒன்று நடைபெற்றதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக 19.12.25 அன்று இரவு காவல்துறை அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டது.

முதற்கட்ட விசாரணையில், அந்த இளைஞர் பாதிக்கப்பட்டவரை நோக்கி கரம்பிட் (நகத்தால் ஆன) கத்தியை காட்டி, தனது கைப்பேசி மற்றும் தங்க மோதிரத்தை ஒப்படைக்குமாறு மிரட்டியதாக கூறப்படுகிறது.

கிளமென்டி காவல் நிலையத்தைச் சேர்ந்த அதிகாரிகள் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, புகார் கிடைத்த 10 மணி நேரத்திற்குள் சந்தேகநபரை கைது செய்தனர்.

கைது நடவடிக்கையின் போது ஒரு செல்போன், ஒரு தங்க மோதிரம் மற்றும் கரம்பிட் கத்தி ஆகியவை ஆதாரமாக பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த வழக்கில்,ஆயுதம் ஏந்திய நிலையில் கொள்ளை அடித்ததாகவும்,மரணத்தை ஏற்படுத்தும் நோக்கத்திலோ அல்லது திட்டமிட்டு காயப்படுத்தியதாகவோ அந்த டீனேஜர் மீது குற்றம் சாட்டப்படும்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால்,அவருக்கு 5 முதல் 20 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், குறைந்தது 12 பிரம்படிகளும் விதிக்கப்படலாம்.

இதுபோன்ற வெளிப்படையான குற்றச் செயல்களை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள மாட்டோம் என்றும்,குற்றவாளிகளை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.

மேலும்,இதுபோன்ற சூழ்நிலைகளில் பொதுமக்கள் அமைதியாக இருக்கவும், குற்றவாளியின் தோற்றம் மற்றும் அடையாளங்களை நினைவில் வைத்துக் கொள்ளவும்,சம்பவத்தை உடனடியாக காவல்துறைக்கு தெரிவிக்கவும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK