சந்தேகப் பொருள் கண்டுபிடிப்பு..!!
தேவாலயத்தில் இப்போது என்ன நிலை..?
சிங்கப்பூர்:சிங்கப்பூரின் செயிண்ட் ஜோசப் தேவாலயத்தில் கண்டறியப்பட்ட சந்தேகத்திற்கிடமான பொருட்கள் குறித்து காவல்துறையும் சிங்கப்பூர் ஆயுதப்படைகளின் உயிரியல், வேதியியல், கதிரியக்க மற்றும் வெடிபொருள் பாதுகாப்புப் படையினரும் மேற்கொண்ட முழுமையான ஆய்வின் பின்னர், எந்தவித ஆபத்தும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்று(21.12.25) காலை 7:10 மணியளவில் உதவிக்கான அழைப்பு வந்ததைத் தொடர்ந்து தேவாலயப் பகுதி சுற்றிவளைத்து மக்கள் வெளியேற்றப்பட்ட நிலையில், நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும், மறு அறிவிப்பு வரும் வரை பொதுமக்கள் தேவாலயத்தைத் தவிர்க்குமாறும் போலீசார் தெரிவித்தனர்.
இதனிடையே, வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் தேவாலயத்திற்கு சென்று பாதிரியார் கிறிஸ்டோபர் லீயைச் சந்தித்து ஆதரவு தெரிவித்ததுடன், சம்பவத்துக்கு விரைவாகவும் அமைதியாகவும் பதிலளித்த காவல் துறை, SAF CBRE, SCDF மற்றும் தேவாலய தன்னார்வலர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
காவல்துறை மற்றும் நிர்வாகத்தின் அறிவுறுத்தல்கள் வரும் வரை தேவாலயத்தை மீண்டும் திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும், வழிபாட்டாளர்கள் அருகிலுள்ள தேவாலயங்களில் நடைபெறும் திருப்பலிகளில் கலந்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.