வெளிநாட்டு ஊழியர்களுக்கு முற்றிலும் இலவசம்..!!

வெளிநாட்டு ஊழியர்களுக்கு முற்றிலும் இலவசம்..!!

சிங்கப்பூரில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு சமூக மற்றும் கலாச்சார அனுபவங்களை வழங்கும் நோக்கில், தேசிய அருங்காட்சியகத்தில் இலவச அனுமதி வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது. இந்த திட்டத்தின் கீழ், மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் வெளிநாட்டு ஊழியர்கள் அருங்காட்சியகத்தின் நிரந்தரக் காட்சிக்கூடங்களை எந்த கட்டணமும் இன்றி பார்வையிட முடியும்.

இந்த இலவச அனுமதி திட்டம் கடந்த அக்டோபர் 26 ஆம் தேதி தொடங்கப்பட்டு, 2026 பிப்ரவரி மாதம் வரை அமலில் இருக்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வேலை அனுமதி (Work Permit) மற்றும் ஸ்பெஷல் பாஸ் (Special Pass) கொண்ட வெளிநாட்டு ஊழியர்கள், உரிய அடையாள ஆவணங்களை காட்டி இந்த சலுகையைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய அருங்காட்சியகத்தின் இந்த முயற்சி, வெளிநாட்டு ஊழியர்களுக்கு சிங்கப்பூரின் வரலாறு, பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை நேரடியாக அறிந்து கொள்ளும் வாய்ப்பை வழங்குவதாக அமைகிறது. சமூக ஒருங்கிணைப்பை வலுப்படுத்தும் வகையிலும், வெளிநாட்டு தொழிலாளர்களின் ஓய்வுநேரத்தை பயனுள்ளதாக மாற்றும் நோக்கிலும் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த திட்டம் தொடர்பான தகவல்கள், தேசிய அருங்காட்சியகத்தின் அதிகாரப்பூர்வ வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளன.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK