சிங்கப்பூரில் 2026 முதல் அமலுக்கு வரும் புதிய சட்டங்கள்..!!
சிங்கப்பூர்:பொதுமக்களின் பாதுகாப்பு, மோசடிகளைத் தடுப்பது,குடியேற்றக் கட்டுப்பாடு,ஆன்லைன் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு நோக்கங்களுடன்,2025 டிசம்பர் முதல் சிங்கப்பூரில் பல புதிய சட்டங்கள் மற்றும் சட்ட திருத்தங்கள் அமலுக்கு வரவுள்ளன.
இந்த சட்டங்களை மீறினால் சிறை தண்டனை, அபராதம், நுழைவு மறுப்பு போன்ற கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சிங்கப்பூர் அரசு எச்சரித்துள்ளது.
🔶️ டிசம்பர் 30 முதல் அமலுக்கு வரும் புதிய சட்டம்:
சிங்கப்பூரில் இனி சிறிய குற்றமாக இருந்தாலும் தப்பிக்க முடியாது.
👉அதன்படி மோசடி,திருட்டு,அவமதிப்பு உள்ளிட்ட குற்றங்களுக்கு 6 பிரம்படிகள் என்ற தண்டனை கட்டாயமாகிறது.
👉அதுவே நேரம் குற்றத்தின் தீவிரத்தை பொறுத்து 6 பிரம்படிகள் என்பது 24 பிரம்படிகளாக அதிகரிக்க வாய்ப்பு உண்டு.
ஜனவரி மாதம் முதல் அமலுக்கு வரும் சட்டங்கள்:
🔶️SIM கார்டு தவறான பயன்பாட்டுக்கு புதிய சட்டம் ஜனவரி 1 முதல்,SIM கார்டுகளை மோசடி, குற்றச் செயல்களுக்கு வழங்கினால் கடும் தண்டனை விதிக்கப்படும். தண்டனை விவரம்: 👉முதல் முறை குற்றம்: 3 ஆண்டுகள் வரை சிறை அல்லது S$10,000 வரை அபராதம் 👉மீண்டும் குற்றம் செய்தால்: 5 ஆண்டுகள் வரை சிறை அல்லது S$20,000 வரை அபராதம்
🔶️ஜனவரி 2 முதல், இரத்த தானம் செய்பவர்களின் வயது வரம்பு 60லிருந்து 65 ஆக உயர்வு.
🔶️சிங்கப்பூர் நுழைவதற்கு முன்பே தடை – No Boarding Rule ஜனவரி இறுதியில் இருந்து, சிங்கப்பூருக்கு வரும் பயணிகள் விமானத்தில் ஏறுவதற்கு முன்பே சோதிக்கப்படுவார்கள். இந்த நிலையில்: விசா / பாஸ்போர்ட் சரியில்லை என்றால் 👉விமானத்தில் ஏற அனுமதி மறுப்பு விமான நிறுவனங்களுக்கே பயணியை தடுக்க அதிகாரம் 👉 விமான நிலையத்தில் ஏற்படும் இக்கட்டான சூழ்நிலையை தவிர்க்க முன்கூட்டியே ஆவணங்களை சரிபார்க்க அரசு அறிவுறுத்தியுள்ளது.
🔶️ வாடகை வீடுகளில் சட்டவிரோத தங்கல் – கடும் நடவடிக்கை
2026 முதல்,அனுமதியில்லாமல் குடியிருப்பில் வெளிநாட்டவர்களை தங்க வைத்தால் கடும் நடவடிக்கை.
வீட்டு உரிமையாளருக்கும் குற்றம் தண்டனை: 👉S$60,000 வரை அபராதம் 👉6 முதல் 12 மாதங்கள் வரை சிறை தண்டனை. 👉HDB வீடுகள் பறிமுதல் செய்யப்படும் அபாயம்.
🔶️ பொது இடங்களில் வன்முறை & கைகலப்பு – பூஜ்ஜிய சகிப்புத்தன்மை.
சிறிய கைகலப்பாக இருந்தாலும், 2026 முதல் கடுமையான குற்றமாக கருதப்படும்.
👉பப்கள், உணவகங்கள், MRT, பொது சாலைகள் கைகலப்பு / மிரட்டல் போன்ற செயல்களை செய்தால் குற்றத்தைப் பொறுத்து தண்டனை வழங்கப்படும்.
தண்டனை விவரம்: சிறை தண்டனை: 👉 1 ஆண்டு முதல் 5 ஆண்டுகள் வரை சிறை அபராதம்: 👉 அதிகபட்சம் S$10,000 வரை பிரம்படி தண்டனை : 👉 குறைந்தபட்சம் 6 பிரம்படிகள் (கட்டாயம்) 👉 குற்றத்தின் தீவிரத்தைப் பொறுத்து 12 முதல் 24 பிரம்படிகள் வரை.
மீண்டும் குற்றம் செய்தால்: சிறை காலம் அதிகரிப்பு பிரம்படி எண்ணிக்கை கட்டாயமாக உயர்வு.
🔶️ E-Cigarette / Vape வைத்திருப்பவர்களுக்கு கூடுதல் தண்டனை ஏற்கனவே தடை செய்யப்பட்ட Vape தொடர்பான சட்டம் மேலும் கடுமை. 👉வைத்திருத்தல் 👉பயன்படுத்தல் 👉பிறருக்கு வழங்கல்
தண்டனை விவரம்: முதல் முறை குற்றத்திற்கு விரிக்கப்படும் அபராதம்: 👉 அதிகபட்சம் S$2,000 வரை
சிறை தண்டனை: பொதுவாக அபராதம் விதிக்கப்படும். ஆனால் தீவிர வழக்குகளில் சிறை தண்டனை விதிக்கப்படலாம்.