பயணிகளை அதிருப்தியில் ஆழ்த்திய வேர்ல்ட் லெகசி கப்பல்..!!

பயணிகளை அதிருப்தியில் ஆழ்த்திய வேர்ல்ட் லெகசி கப்பல்..!!

சிங்கப்பூர்: உலகக் கப்பல் நிறுவனமான ‘வேர்ல்ட் லெகசி’ மீது பெரும் எதிர்பார்ப்புடன் டிக்கெட் முன்பதிவு செய்த பயணிகள், கிறிஸ்துமஸ் ஈவ் அன்று கடும் ஏமாற்றத்தை சந்தித்துள்ளனர். பெரிதும் விளம்பரப்படுத்தப்பட்ட இந்த கப்பலின் முதல் பயணம் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டதுடன்,அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் இருந்ததால் பயணிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

கிறிஸ்துமஸ் ஈவ் அன்று கப்பலில் ஏறிய பலர், ஏர் கண்டிஷனிங், லிஃப்ட், போதிய உணவு வசதி, அறிவிக்கப்பட்ட பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் எதுவும் இல்லை என குற்றம்சாட்டி சமூக ஊடகங்களில் புகார் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட பயணிகள், குழந்தைகளுடன் விடுமுறை கொண்டாடும் கனவு முற்றிலும் சிதைந்ததாக கூறுகின்றனர்.

இதுகுறித்து விளக்கம் அளித்த கப்பல் நிறுவனம், செயல்பாட்டு தேவைகள் காரணமாக பயணத் திட்டங்களில் மாற்றம் செய்யப்பட்டதாகவும், அனைத்து பயணிகளுக்கும் முழுப் பணம் திருப்பி வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

மேலும் பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு மன்னிப்பு கேட்ட நிறுவனம், எதிர்காலத்தில் சேவை தரத்தை மேம்படுத்துவதாக உறுதியளித்துள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK