நடுக்கடலில் போராடிய உயிர்..!! பிறகு நடந்தது என்ன..??

நடுக்கடலில் போராடிய உயிர்..!! பிறகு நடந்தது என்ன..??

சிங்கப்பூர்:சிங்கப்பூர் கடல் பகுதியில் பயணக் கப்பலில் இருந்த ஒருவருக்கு திடீரென அவசர மருத்துவ உதவி தேவைப்பட்டது.

தகவல் கிடைத்தவுடன் சிங்கப்பூர் விமானப்படை உடனடி நடவடிக்கை எடுத்து RESCUE 10 H225M நடுத்தர ஹெலிகாப்டரை சம்பவ இடத்திற்கு அனுப்பியது.

ஹெலிகாப்டர் மூலம் பயணி பாதுகாப்பாக மீட்கப்பட்டு, சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

மருத்துவர்கள் கூறுகையில்,அவர் சுயநினைவுடன் நிலையான உடல்நிலையில் இருப்பதாக தெரிவித்தனர்.

24 மணி நேரமும் தயார் நிலையில் பணியாற்றிய மருத்துவக் குழு, ஹெலிகாப்டர் குழுவினர் மற்றும் மீட்புப் பணியாளர்களுக்கு விமானப்படை நன்றி தெரிவித்துள்ளது.

மேலும்,மீட்கப்பட்ட பயணி விரைவில் குணமடைய வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK