சிங்கப்பூரில் தனியாக தவித்த பறவை..!! இணையத்தில் வெளியிட்ட பதிவு..!!

சிங்கப்பூரில் தனியாக தவித்த பறவை..!! இணையத்தில் வெளியிட்ட பதிவு..!!

புக்கிட் பாத்தோக்கில் உள்ள கார் நிறுத்தும் இடத்தில் கடந்த வாரம் ஆந்தை குஞ்சு ஒரு காரின் கூரையில் விழுந்து கிடப்பதை தியா என்பவர் பார்த்துள்ளார். இது குறித்த பதிவை இணையத்தில் வெளியிட்டார்.

இணையத்தில் பதிவிட்ட குறிப்பில் பலவீனமாக தன் குடும்பங்களுடன் இல்லாமல் தனியாக தவித்தால் ஆந்தையை யாரும் கண்டு கொள்ளவில்லை என்று கூறியிருந்தார்.

உடனே அந்த ஆந்தையை பத்திரமாக வீட்டுக்கு கொண்டு சென்று அதற்கு தண்ணீர் கொடுத்து பிறகு தேசிய பூங்கா கழகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.

அதிகாரிகள் நிறைந்து வந்த ஆந்தையின் கூட்டையும் அதன் தாயையும் தேட முயன்றும் கிடைக்கவில்லை அவர்கள் ஆந்தையை பரிசோதித்து அது நலமாக இருப்பதை உறுதி செய்தனர்.

அதிகாரிகள் தாய் பறவையோடு சேர்த்து வைக்க நினைத்த அதை கண்டுபிடிக்கப்பட்ட இடத்திற்கு அருகில் இருந்த ஒரு கூட்டில் அதை விட்டுச் சென்றனர்.

இதுபோன்ற ஆபத்தில் இருக்கும் பறவைகளைக் கண்டால் உடனே தகவல் தெரிவிக்கும்படி பொதுமக்களுக்கு தேசிய பூங்கா கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK