சிங்கப்பூரில் அதிகரிக்கும் SMS SCAM ..!! 100 -க்கும் அதிகமானோர் பாதிப்பு..!!

சிங்கப்பூரில் அதிகரிக்கும் SMS SCAM ..!! 100-க்கும் அதிகமானோர் பாதிப்பு..!!

சிங்கப்பூரில் கடந்த மாதம் (மார்ச்) உள்ளூரில் குறைந்தது 146 ஆள்மாறாட்ட மோசடி வழக்குகள் நடந்துள்ளன. இந்த மோசடியில் பாதிக்கப்பட்டவர்கள் $ 311,000 – க்கும் அதிகமான பணத்தை இழந்துள்ளனர்.

இந்த மோசடி குறித்து நேற்று (ஏப்ரல் 24) மாலை சிங்கப்பூர் காவல்துறையினர் ஒரு அறிக்கை வெளியிட்டனர். அவ்வறிக்கையில் பாதிக்கப்பட்டவர்கள் மோசடிக்காரர்களிடமிருந்து தொலைபேசி, வாட்ஸப் அல்லது SMS வழியாக அழைப்புகளையோ அல்லது குறுஞ்செய்திகளோ பெறுவார்கள்.

மோசடிக்காரர்கள் “நான் யார் என்று கண்டுபிடிங்கள் ” அல்லது “உங்களுக்கு என்னை நினைவிருக்கிறதா?” போன்ற கேள்விகளைக் கேட்டு பாதிக்கப்பட்டவர்களை அவர்களின் அடையாளத்தை யோசிக்க சொல்வார்கள்.

பாதிக்கப்பட்டவர்கள் ஒரு நண்பர் அல்லது அவரது உறவினரின் பெயரை சொன்னவுடன், மோசடி செய்யும் நபர் அந்த நபராக எதிரில் இருப்பவரிடம் தொடர்ந்து உரையாடலை மேற்கொள்வார்.

பின்னர் மோசடிக்காரர் அவசர நிதி நெருக்கடி அல்லது வங்கி பரிவர்த்தனைக்கு உதவி தேவை என்று கூறி, பாதிக்கப்பட்டவரைத் தொடர்புக் கொண்டு உள்ளூர் வங்கி கணக்கு, PayNow எண் அல்லது பண பரிமாற்றத்திற்கான QR குறியீட்டை கேட்பார்.

பாதிக்கப்பட்டவர்கள் உண்மையான அறிமுகமானவரைத் தொடர்பு கொண்டபின்னரே, அவர்கள் மாற்றப்பட்டதை உணர்கிறார்கள் என இந்த மோசடி குறித்து காவல்துறை கூறியுள்ளனர்.

அறியப்படாத எண்களில் இருந்து அழைப்புகள் வரும்போது அல்லது அவசர நிதி உதவிக்கான கோரிக்கைகள் வரும்போது பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு காவல்துறை அறிவுறுத்தி உள்ளது.

அழைத்தவரின் அடையாளத்தை எப்போதும் மற்ற வழிகளில் சரிபார்க்க வேண்டும் எனவும் சரி பார்க்கப்படாத நபர்களுக்கு ஒருபோதும் பணத்தை அனுப்ப வேண்டாம் எனவும் காவல்துறை பொதுமக்களிடம் கூறியுள்ளது.

அரசு அதிகாரிகள் பொதுமக்களிடம் சில விபரங்களை ஒருபோதும் கேட்க மாட்டார்கள் என்று காவல்துறை வலியுறுத்தி இருக்கிறது. அவை பின்வருமாறு:
👉தொலைபேசி மூலம் பணப்பரிமாற்றங்களைக் கேட்டல், ஆடம்பர கைக்கடிகாரங்கள், தங்கம் மற்றும் கிரிப்டோகரன்சியை ஒப்படைத்தல்.

👉வங்கி உள் நுழைவுத் தகவல்களைக் கேட்டு வாங்குதல்.

👉அதிகாரப்பூர்வமற்ற செயலி சந்தைகளில் இருந்து மொபைல் செயலிகளைப் பதிவிறக்கம் செய்யக் கேட்டுக்கொள்ளுதல்.
.
👉காவல்துறைக்கு அழைப்புகளை மாற்றுதல்

மோசடி அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள பொதுமக்கள் ஸ்கேம்சீல்டு (Scamshield) என்ற செயலியைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும். மேலும் பணப்பரிமாற்று வரம்புகள் மற்றும் இரு காரணி அங்கீகாரம் அல்லது பல காரணிகள் அங்கீகாரத்தை இயக்குதல் போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை அமைத்துக் கொள்ளவும் பொதுமக்களுக்கு காவல்துறை பரிந்துரைத்துள்ளது.

மோசடி குறித்த மேலும் தகவல்களைப் பொதுமக்கள் தெரிந்துகொள்ள www.scamsheild.gov.sg என்ற இணையதளத்தை பார்வையிடலாம். அல்லது 1799 என்ற என்னில் 24 மணி நேர ஸ்கேம்ஷீல்டு உதவி எண்ணை அழைக்கலாம்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK