சிங்கப்பூரில் 11 பேரை கைது செய்த காவல்துறையினர்..!! காரணம் என்ன..??
இணையங்களில் பிள்ளைகளை பாலியல் அத்துமீறலுக்கு இணங்க வேண்டும் என துன்புறுத்திய நபர்கள் மீது அதிரடி சோதனை சிங்கப்பூரில் நடந்துள்ளது.
சிங்கப்பூர், ஹாங்காங், ஜப்பான், மலேசியா, தென் கொரியா, தாய்லாந்து மற்றும் புருணை போன்ற 382 பகுதிகளில் காவல் துறையினர் கடந்த ஒரு மாதமாக அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த அதிரடி சோதனைக்காக தொழில்நுட்ப நிறுவனங்கள் நிதி கழகங்கள் லாப நோக்கம் இல்லாமல் சேவை செய்யும் தொண்டு அமைப்புகள் ஆகியவற்றுடன் இணைந்து இந்த அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டதாக சிங்கப்பூர் காவல்துறையினர் கூறியுள்ளனர்.
இந்த அதிரடி சோதனையில் 326 பெயரை கைது செய்த அதில் 119 பேரிடம் தற்போது விசாரணை தொடரப்பட்டு வருகிறது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.