சிங்கப்பூர்: ஏப்ரல் 25 முதல் 27ஆம் தேதிக்குள் கந்துவட்டிக்காரர்களின் தொந்தரவு குறித்த புகார்கள் வந்துள்ளதாக காவல்துறையினர் நேற்று (ஏப்ரல் 27) மாலை ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
தெம்பனிஸ், ஜூரோங் வெஸ்ட், செம்பவாங், புக்கிட் பாத்தோக், செராங்கூன், செங்காங் மற்றும் அல்ஜூனிட் இடங்கள் இதில் அடங்கும்.
பாதிக்கப்பட்ட குடியிருப்புகளின் கதவுகளில் பந்து வட்டிக்காரர்கள் சிவப்பு வண்ணம் பூசப்பட்டதுடன் சில குடியிருப்பாளர்களுக்கு கடன் வசூல் குறிப்புகளும் அங்கு குறிப்பிடப்பட்டுள்ளது.
சம்பவம் நடந்த இடத்தில் விசாரணை நடத்தியும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தும், பெடொக் காவல் நிலையம், ஆங் மோ கியோ காவல் நிலையம், உட்லண்ட்ஸ் காவல் நிலையம் மற்றும் காவல் செயல்பாட்டு கட்டுப்பாட்டு மையத்தைச் சேர்ந்த அதிகாரிகள் கதவுகளில் சிவப்பு வர்ணம் பூசி சேதப்படுத்திய குற்றத்திற்காக இளைஞரை அடையாளம் கண்டு 14 மணி நேரத்திற்குள் கைது செய்துள்ளனர்.
காவல்துறையினர் மேலும் ஆதாரங்களாக 10 பெயிண்ட் கேன்கள், 13 கடன் வசூல் குறிப்புகள் மற்றும் ஒரு கைபேசியையும் கைப்பற்றியுள்ளனர்.
பணக்கடன் வழங்குவோர் சட்டத்தின் கீழ் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்ட நபர் மீது இன்று (ஏப்ரல் 28) நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும். சட்டவிரோத பணக்கடன் தொந்தரவு வழக்கில் குற்றவாளி என நிரூபணம் ஆனால் முதல் முறை குற்றம் செய்பவர்களுக்கு $5,000 முதல் $50,000 வரை அபராதம் 5 ஆண்டுகள் சிறை தண்டனை அத்துடன் ஆறு பிரம்படிகள் வரை விதிக்கப்படும்.
சட்டவிரோதமாக கடன் வழங்குதல் மற்றும் தொந்தரவு நடவடிக்கைகளை சற்றும் பொறுத்துக்கொள்ள முடியாது எனவும் வேண்டுமென்றே சொத்துக்களை சேதப்படுத்துதல், பொதுமக்களுக்கு தொந்தரவு விளைவித்தல் அல்லது பொது பாதுகாப்பு மற்றும் ஒழுங்கிற்கு ஆபத்தை விளைவித்தல் போன்ற எந்த ஒரு செயலும் சட்டப்படி கடமையாக கையாளப்படும் என்று காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
சட்டவிரோதமாக கடன் வழங்குபவர்களிடமிருந்து சற்று விலகி இருக்க வேண்டும் எனவும் காவல்துறை பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
சட்டவிரோத கடன் வழங்கும் நடவடிக்கைகளில் யாரேனும் ஈடுபட்டதாக சந்தேகம் எழுந்தாலோ அல்லது தங்களுக்கு அறிய வந்தாலும் ‘999’ என்ற காவல்துறை அவசர உதவி என்னை அழைத்து அவர்களைப் பற்றி புகார் தெரிவிக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.