முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை திட்டம்..!! LTA அறிவிப்பு..!!
சிங்கப்பூர் : நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) “முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை ” என்ற புதிய .த் திட்டத்தை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
பொது போக்குவரத்தில் அனைவரையும் உள்ளடக்கும் தன்மையை மேம்படுத்தும் வகையில் இந்த திட்டத்தை 10 பேருந்து வழித்தடங்களில் சோதனை அடிப்படையில் முதலில் தொடங்க உள்ளது.
இந்த திட்டத்தில் சக்கர நாற்காலி மற்றும் தள்ளுவண்டிகளுக்கான மண்டலங்களை செயல்படுத்தும் ம மாத கால முன்னோடி திட்டத்தை தற்பொழுது LTA தொடங்கியுள்ளது.
இத்திட்டத்தில் பங்கேற்கும் 10 பேருந்து வழித்தடங்களை LTA முகநூலில் இன்று (ஏப்ரல் 27) பதிவிட்டிருந்தது. அவை பின்வருமாறு: 5/5A/5B,54,57,67,131/131A,143/143M,166,851/851e,960/960e மற்றும் 980 ஆகிய பேருந்துகள்.
இந்த பேருந்து வழித்தடங்களில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்கள் அதிகமாக இருப்பதாகவும்,இந்த வழித்தடங்கள் முக்கியமாக மகப்பேறு மற்றும் குழந்தைகள் மருத்துவமனைகளைக் கடந்து செல்வதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பயணிகளின் தேவைக்கு உதவுவதற்கும், பயணத்தின் அனுபவத்தை உறுதி செய்வதற்கும் இந்த பேருந்துகளின் ஓட்டுநர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக LTA அறிவித்துள்ளது.
பொதுப் போக்குவரத்து சூழலை உருவாக்குவதற்காக ஒன்றினைந்து செயல்படும் வகையில் இந்த முன்னோடி திட்டம் குறித்த கருத்துக்களை வழங்குமாறு பொதுமக்களிடமும் அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.